சிவனொலிபாத மலையை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடின் சாகும் வரை உண்ணாவிரதம்

சிவனொலிபாத மலையை பாதுகாப்பதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காதுவிடின் இன்று முதல் சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபடப் போவதாக சிங்களே ஜாதிக பலமுலுவ அமைப்பு அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரத்தனசார தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

சிவனொலிபாத மலையைப் பாதுகாப்பை வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமை கண்டியிலிருந்து ஆரம்பமாகிய பாதயாத்திரை இன்று நல்லதன்னியில் முடிவடையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். புனிதத் தலங்களில் ஒன்றான சிவனொலி பாதமலைக்கு அருகில் சுற்றுலா விடுதி அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கண்டியிலிருந்து மஸ்கெலியா வரையான பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

சிங்ஹலே என்ற பேரினவாத அமைப்பு இந்த பாதயாத்திரையை ஏற்பாடு செய்திருந்தது. சிவனொலி பாதமலைக்கு அருகில் காணப்படுகின்ற மற்றும் நிர்மாணிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள அனைத்து சுற்றுலா விடுதிகளும் அந்த வலயத்திலிருந்து வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட வேண்டும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அரம்பேபொல ரத்தனசார தேரர் தெரிவித்துள்ளார்.

மவுஸ்ஸாகலை நீர்த் தேக்கத்திற்கு அருகில் உள்ள மரே நீர்வீழ்ச்சிப் பகுதியில் காணப்படும் தனியார் காணியில் பாரிய சுற்றுலா விடுதி ஒன்று அமைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன. இந்த சுற்றுலா விடுதி அமைக்கப்பட்டால் புனிதத் தலத்திற்கு அகௌரவம் ஏற்படும் என்பதோடு சூழல் மாசுக்களும் ஏற்படும் என்று சிங்ஹலே அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -