இறக்கமப் பிரதேச நன்னீர் மீனவர் சங்கத்தின் ஏற்பாட்டில் இறக்காமக் குளத்தில் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு இன்று (2/11/2016) இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவினுடைய இணைத்தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும், விசேட அதிதியாக இறக்காமப் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் அவர்களும் ஏனைய அதிதிகளாக இறக்காமப் பிரதேச செயலாளர் எம்.எம்.நசீர் மற்றும் மாவட்ட மீன்பிடிப் பணிப்பாளர் ரோஹித அவர்களும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் அரசினால் ஒதுக்கப்பட்ட ஒரு லட்சம் மீன் குஞ்சுகள் இறக்காமக் குளத்தில் விடப்பட்டதுடன் பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கான அனுமதி பத்திரங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னால் இறக்காமப் பிரதேச சபை தவிசாளர் நைசர் உயர்பீட உறுப்பினர் ஏ.றியாஸ் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஜிப்ரி மத்திய குழு அமைப்பாளர் நிசார் ஆகியோருடன் இறக்காமப் பிரதேச மீனவர்களும் கலந்து கொண்டனர்.
றிஜாஸ் அஹமட்-