மாகாண சபை நிதி ஒதிக்கீட்டில் தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் வாசிகசாலை திறந்து வைப்பு..!

எம்.ரீ.ஹைதர் அலி-
ட்டு மாவட்டத்தின், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்வி அலுவலகத்தின், கோறளைப்பற்று மேற்கு கோட்டத்திற்குட்பட்ட மட்/மம/தியாவட்டவான் அறபா வித்தியாலயத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. அல்ஹாஜ். Z.A. நஸீர் அஹமட் அவர்களினால் 2015ஆம் ஆண்டுக்கான நிதி ஒதிக்கீட்டிலிருந்து இருபது இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட வாசிகசாலைக்கான கட்டடம் (2016.11.09ஆந்திகதி - புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வானது பாடசாலையின் அதிபர் M.S.M. கஸ்ஸாலி அவர்களின் தலைமையில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் கௌரவ. Z.A. நஸீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M.I. சேகு அலி, மாவட்ட பாடசாலைகள் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் A.M.M. ஹக்கீம், கோறளைப்பற்று மேற்கு கோட்டக்கல்வி அதிகாரி M.L.M. ஜுனைட் மற்றும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் K.B.S. ஹமீட் ஆகியோரினால் திறை நீக்கம் செய்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலைக்கு அதிபரின் அழைப்பின் பேரில் கடந்த (2016.10.18ஆந்திகதி செவ்வாய்க்கிழமை) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் அவர்களிடம் பாடசாலை அதிபரினால் மாணவர்களின் கற்றல் அறிவு விருத்திக்கு தேவைப்பாடாகக் காணப்பட்ட வாசிகசாலை ஒன்றினை அமைப்பதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சரினால் நிதி ஒதிக்கீடு மேற்கொள்ளப்பட்டு கட்டடம் பூர்த்தியாக்கப்பட்டுள்ள நிலையில் இன்றுவரை கொந்தராத்துகாரரால் பாடசாலைக்கு கையளிக்கப்படாமல் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதனை கருத்திற்கொண்ட பொறியியலாளர் M. ஷிப்லி பாறுக் மாவட்ட பாடசாலைகள் வேலைத்திட்டத்திற்கு பொறுப்பான பொறியியலாளர் A.M.M. ஹக்கீம் அவர்களை தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு பாடசாலைக்கு வரவழைத்து தெரியப்படுத்தியதோடு, உடனடியாக பாடசாலையின் அதிபரின் பொறுப்பில் வாசிகசாலையைினை கையளிப்பதற்குரிய நடவடிக்கைகளையும் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் இப்பாடசாலையில் குர்ஆனை மனனம் செய்த மூன்று மாணவிகளுக்கு முதலமைச்சரினால் தலா 5000 ரூபா வீதம் காசு வழங்கப்பட்டதோடு, தரம் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் ஒரு மாணவியின் வாழ்நாள் கல்விக்காக செலவாகும் செலவீனத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள், பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள், பள்ளிவாசல்களின் நிருவாக உறுப்பினர்கள், பொது அமைப்புக்களின் நிருவாக உறுப்பினர்கள், விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பெருந்திரலான ஊர் மக்களும் கலந்துகொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -