எம்.எம்.ஜபீர்-
காரைதீவு பிரதேச சபைக் கீழுள்ள மாவடிப்பள்ளி பொது நூலகம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிரின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண முதலமைச்சர் இஸட்.ஏ.நஸீர் அஹமட் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நேற்று நூலகத்தினை வைபக ரீதியாக திறந்து வைத்ததார்.
இந்நிகழ்வு காரைதீவு பிரதேச சபை செயலாளர் கே.நாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாரை மாவட்ட அபிவிருத்திக் குழுத் இணைத் தலைவருமான எம்.ஐ.எம்.மன்சூர், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அம்பாரை மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ரீ.எம்.றாபீ, உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது கருத்து தெரிவித்த முதலமைச்சர் இந்ந பிரதேச இளைஞர்கள் இந்ந மாவடிப்பள்ளி பொது நூலகத்தினை திறப்பதில் காணப்பட்ட ஆர்வத்தை என்னால் பாரட்டாமல் இருக்கமுடியாது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு சகல வசதிகளுடன் கூடிய நூலகமாக மாற்றிமைக்கபடும் என்பதை கலந்து கொண்ட இளைஞர்கள், பிரதேச பொதுமக்களிடம் முதலமைச்சர் வாக்குதியளித்ததுடன் நூலகத்திற்கு தேவையான ஒரு தொகை புத்தங்களும் உபகரணங்களும் முதலமைச்சரினால் கையளிக்கப்பட்டது.