இலங்கையின் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு உட்பட வர்த்தக செயற்பாடுகள் சர்வதேச நாடுகளுக்கு முன்னுதாரணமாகவிளங்குகின்றது! துருக்கி இலங்கையின் முக்கிய பங்காளர். இலங்கைக்கும் துருக்கிக்குமிடயிலான பலமான உறவு நீண்டகாலமாக பேணப்பட்டு வருகின்றது எனகைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை துருக்கி அன்கராவில் நடைபெற்ற துருக்கி- இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும்பொருளாதார கூட்டிணைப்பு கூட்டத்தின் இரண்டாவது அமர்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ரிஷாட் இதனை தெரிவித்தார். இலங்கை சார்பாக அமைச்சர் ரிஷாட் தலைமையிலான விசேட குழுவும் துருக்கி சார்பாக கல்வி அமைச்சர் இஸ்மெட் இல்மாஸ் தலைமையிலானவிசேட குழுவும் இவ் அமர்வில் கலந்தக்கொண்டனர்.
அமைச்சர் ரிஷாட் இவ்அமர்வில் தொடர்ந்து உரையாற்றுகையிலேயே தெரிவித்தாவது: துருக்கியும் இலங்கையும்; உத்தியோகபூர்வமாகஸ்தாபிக்கப்பட்ட தமது இராஜதந்திர உறவுகளை 68 ஆண்டுகளாக அனுபவித்து வருகின்றனர். துருக்கிக்கும் இலங்கைக்குமிடையிலான கூட்டுக்குழுமுயற்சி 1991 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இது இரு நாடுகளுக்குமிடையிhன கூட்டுடமையின் ஒரு சின்னமாக இருக்கிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நல்லாட்சி, நல்லிணக்கம், ,சமாதானம் மற்றும் சுபீட்சம் ஆகியவற்றின் பலன்களை முழு மக்கள் அனுபவிக்கின்ற உறுதிசெய்யும் ஜனநாயகம், அதன் கட்டமைப்புகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியினை வலுப்படுத்த ஒரு திறந்த மற்றும் வெளிப்படையான நிகழ்ச்சி நிரலைபின்பற்றி வருகின்ற நேரத்தில் இலங்கை துருக்கி - கூட்டு ஆணைக்குழுவின் தொழிநுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மீதான முதல் சுற்று26 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுகின்றமை முக்கியதுவமானது.
தவிர்க்க முடியாத பல்வேறு காரணமாக 26 ஆண்டுகளாக கூட்டுக் குழுவினை கூட்ட முடியவில்லை. இதனால் இருதரப்பு பரஸ்பர வர்த்தக மட்டம் மற்றும் சர்வதேச தளம் மீதான வலுவான இருதரப்பு ஒருங்கிணைப்புக்கிடையே ஒரு நீண்ட இடைவெளி காணப்பட்டது. என்றாலும், 2012 -2013 ஆம்ஆண்டு காலப்பகுதிகளில் அங்காராவிலும் கொழும்பும்பிலும் வதிவிட தூதரகங்கள் நிறுவப்பட்ட பின்னர் குறிப்பாக இலங்கை மற்றும் துருக்கி இடையேஉறவுகள் முறையே தழைத்தோங்கின.
2015 ஆம் ஆண்டு துருக்கி- இலங்கையிடையிலாக இருதரப்பு பரஸ்பர வர்த்தகம் 230 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். தெற்காசிய சந்தையில்இலங்கையின் பொருளாதாரமானது முதலீடு மற்றும் வர்த்தகம் மீதான ஒரு பெரிய வாய்ப்பை வழங்குகிறது. இன்று, இலங்கை நாட்டை மீண்டும்கட்டியெழுப்புவதற்கு ஆர்வமாக உள்ளதுடன் துருக்கி போன்ற நட்பு நாடுகளுடன் இணைந்து அதன் பொருளாதாரத்தை விருத்திசெய்ய விரும்புகிறது.;
நம் நாட்டு மக்களின் அபிலாஷைகளுக்காக நாட்டின் வரலாற்றில் ஒரு தனித்தன்மை வாய்ந்த நேரத்தில் முதல் முறையாக இரண்டு பிரதான அரசியல்கட்சி;கள் ஒருமித்து, ஒரு சம்மதத்துடன் பொதுவான விடயங்கள் மீதான செயற்பாடுகளை முன்னோக்கி நகர்த்தி வருகின்றனர். இது முக்கியமானதேசிய இலக்குகளை அடைவதற்கான செயலாகும்;.
பொருளாதார முன்னணியில் இலங்கையானது, 'வரிகள் மற்றும் வர்த்தகம் மீதான பொது ஒப்பந்தம்' மற்றும் உலக வர்த்தக மையத்தின் ஸ்தாபகஉறுப்பினர், அத்துடன் 1978 ஆம் ஆண்டு உலக பொருளாதாரத்தில் அதிக ஒருங்கிணைப்பினை அடைவதற்கு நோக்காகக் கொண்டு; தாராளவாதமற்றும் சந்தை சார்ந்த பொருளாதாரக் கொள்கைகளை முழுமையாக உறுதி செய்து அறிமுகப்படுத்தியது.
சர்வதேச வர்த்தகம், இணக்கமான சினேகபூர்வ முதலீட்டு சூழ்நிலை, மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடுளை ஏனையவர்கள் மத்தியில்ஊக்கப்படுத்துவதற்குமான வெளிப்படைத்தன்மையும் தனியார் துறை வர்த்தக வளர்ச்சி சூழலை ஸ்தாபிப்பதற்குமான செயற்பாடுகள் நாட்டின்அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கின்றமை காணக்கூடியதாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், மனித அபிவிருத்தி குறியீட்டின் மீதான மனிததிறன்களின் சாதனைகள் தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது இலங்கை உயர் மட்டத்தில் உள்ளது.
மூலோபாய மையத்தினை கருத்திற்கொண்டு , இலங்கை வளர்ந்து வரும் நடுத்தர வருமான கொண்ட நாடு என்ற அடிப்படையில், வர்த்தகம் மற்றும்பொருளாதார இணைப்புககள் மீது விரிவாக்கம் மற்றும் ஊக்குவிப்புக்களை ஏற்படுத்தி வெளி உலகிற்கு கொண்டு செல்வதற்கு தொடர்நது திறந்தமற்றும் இலகு சந்தை பொருளாதார கொள்கையை பின்பற்றுகின்றது.
கடந்த அக்டோபர் 27 திகதி இலங்கை பிரதமர் பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகயை சமர்ப்பிக்கும் போது, குறிப்பாகஇலங்கையில் நிலையான மற்றும் விரைவான பொருளாதார வளர்ச்சியினை எட்டுவதற்கு சில அடையாளப்படுத்தப்பட்ட துறைகளுக்கு கொடுக்கப்படும்முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகளுடன் இலங்கை ஏற்கனவே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளது. பிராந்தியஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில், தெற்காசிய சுதந்திர வர்த்தக பகுதியின் கீழ் ஏனைய தெற்காசியநாடுகளுடன் இலங்கை இலவச வர்த்தக