கடந்த செவ்வாய்க்கிழமை (8.11.2016) அன்று மதியம் தனது அலுவலகக் கடமை நிமித்தம் வாழைச்சேனையிலுள்ள வீதியொன்றினால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது, ஒருவரின் துவிச்சக்கர வண்டியுடன் மோதுண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த ஊடகவியலாளர் முர்ஷித் அவர்களின் இடது காலில் உடைவு ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்ற ஊடகவியலாளர் முர்ஷித் தற்போது வீட்டிலுள்ளார். இவர் தொடர்ந்து ஆறு வாரங்கள் ஓய்வாக இருக்க வேண்டுமென அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.
இவருடன் துவிச்சக்கர வண்டியில் மோதுண்ட நபருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. வாழைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் எஸ்.எம். முஹம்மது முர்ஷித் நீண்ட காலமாக பிராந்திய ஊடகவியலாளராக அச்சு மற்றும் இலத்திரனியல் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வெகு விரைவில் இவர் குணமடைந்து தனது பணியை மெம்மேலும் மக்களுக்கு அர்ப்பணிக்க பிரார்த்திப்போமாக.