பலிக்கடா ஆக்கப்படும் இஸ்லாமிய இலக்கியவாதிகள் - பொன்விழா சங்கதி

இலக்கியன் முர்சித்-

ரலாறு நெடுகிலும் அரசியலும் இலக்கியமும் அண்ணன் தம்பிகள் போலவே பார்க்கப்பட்டும் உணரப்பட்டும் வந்திருக்கின்றன. புலவர்கள் இல்லாத எந்த அரசபையும் வரலாற்றில் இருந்ததில்லை என்றே கூறவேண்டும். அந்த காலகட்டத்தில் மன்னர்களாலும் மந்திரிகளாலும் புலவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கல்வியாளர்களை ஏனைய செல்வங்களை விடவும் உயர்வாகவே மதிக்கப்பட்டு நடாத்தப்பட்டும் வந்துள்ளனர். 

ஆனால் இன்றைய காலகட்டத்தில் கம்பு எடுத்தவனெல்லாம் வேட்டைக்காரன் என்பது போல சில குறுகிய சிந்தனைகொண்ட அரசியல் வாதிகளாலும் அவர்களது அடிவருடிகளாலும் இலக்கியத்தினையும் இலக்கியவாதிகளினையும் தங்களது இருப்பினை தக்கவைத்துக் கொள்ளும்நோக்கில் பகடைக்காயாக பயன்படுத்துவதும் பயன்படுத்தத் துடிப்பதும் "உலக இஸ்லாமி இலக்கிய ஆராய்ச்சி பொன்விழா மாநாடு" தொடர்பிலான சில நண்பர்களது பதிவுகள் மூலம் புலனாகிறது. 

கடந்த காலங்களில் தமிழ் இலக்கியத்தின் வளர்சிக்கு தமிழை தாய்மொழியாகக் கொண்ட இஸ்லாமிய புலவர்கள், இலக்கியவாதிகள் மற்றும் கல்வியாளர்கள் கணிசமான பங்களிப்பை வளங்கியிருந்தும் தமிழ் பேசும் ஏனைய பண்டிதர்களால் இஸ்லாமியரின் தனித்துவமான தமிழ் இலகியத்தினையும் அவர்களது உழைப்பினையும் இருட்டடிப்புச் செய்து மட்டம் தட்டப்பட்ட சூழலில் "இஸ்லாமிய இலக்கியம்" தொடர்பிலான ஆராய்சிகள், தொடர்ச்சியான கருத்தாடல்கள் தேவைப்பட்டதை உணர்ந்த இஸ்லாமிய இலக்கிய காவலர் ஹசன் மெளலானா போன்றோர் பேராசிரியர் அல்லாமா உவைஸ் போன்றவர்களின் உதவியுடனும் ஊக்கத்துடனும் 1966 ஆம் ஆண்டு மருதமுனை அல் மனார் வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக பல ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டு நினைவுமலர், சொற்பொழிவுகளின் தொகுப்பு என நூல்களும் வெளியிடப்பட்டு கொண்டாடப்பட்டது.

அதன்பிட்பாடு பேராசிரியர் அல்லாமா உவைஸ் உள்ளிட்டவர்களின் முயற்சியால் இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை உள்ளிட்ட இடங்களிலும் உலக இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாடுகள் சிறப்பாக நடாத்தப்பட்டது. இதற்கு கவிக்கோ அப்துரஹுமான் தலைமையிலான இஸ்லாமிய இலக்கிய கழகம், மலேசிய இஸ்லாமிய எழுத்தாளர்கள் மற்றும் இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தினர் ஆகியோரின் பங்களிப்புக்களும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் இம் மாநாடுகள் தொடர்பிலான அனைத்து செயற்பாடுகளையும் பிற்பட்ட காலப்பகுதியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்தது. அன்றைய காலகட்டத்தில் அதிகாரத்திலிருந்த அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு பெறப்பட்டமை மறுப்பதற்கில்லை.

இஸ்லாமிய இலக்கிய ஆராய்ச்சி மாநாட்டிற்கு ஐம்பது ஆண்டுகள் பூர்த்தியானதை அனைவரும் மறந்திருந்த சந்தர்பத்தில் அதை ஞாபகப்படுத்தி உலக இஸ்லாமிய இலக்கிய பொன்விழா அதன் பூர்வீகமான இலங்கையில், மருதமுனைவில் நடாத்தப்படயிருந்தும் நடைமுறை சிக்கல்கள் காரணமாக கொழும்பில் நடத்துவதற்கு அனைவரினதும் ஆலோசனைகளோடும் முடிவானது. இதற்கு பெருமளவில் நிதி மற்றும் ஆள்பலம் தேவைப்படுவதால் பல அரசியல்வாதிகள் மற்றும் தனவந்தர்களிடம் குறித்த செய்தி எத்திவைக்கப்பட்டு ஆலோசிக்கப்பட்டது. அதில் அமைச்சர் ஹக்கீம், அமைச்சர் ரிசாட் உள்ளிட்டோரும் அடங்குவர். 

வழமை போன்று ஆரம்பத்தில் இருந்தே அமைச்சர் ஹக்கீம் இழுத்தடிப்பு செய்தார். ஆனால் அமைச்சர் ரிசாட் மற்றும் பிரதியமைச்சர் அமீர் அலி ஆகியோர் ஆதரவு வழங்கினார்கள், வழங்கிக்கொண்டு இருக்கிறார்கள். அமைச்சர் ரிசாட் மாநாட்டை முன்நின்று செய்தால் இலங்கை முஸ்லிங்களின் ஏகபோக தலைமை அமைச்சர் ஹக்கீம் எனும் மாயை வெளித்து சர்வதேச அரங்கில் முஸ்லிம் கலை,இலக்கிய வாதிகள் மற்றும் கல்வியலாளர்களிடம் அமைச்சர் ரிசாட்டின் செல்வாக்கும் கவனமும் அதிகரித்துவிடும் என்ற பயத்தில் தாங்களும் ஒரு மாநாட்டை நடாத்தி தங்களின் போலி இருப்பை தக்கவைத்துக் கொள்ளும்நோக்கில் போலி பிரச்சாரங்கள் மற்றும் பகட்டு விளம்பரங்களுடன் அமைச்சர் ஹக்கீமின் கோஸ்ட்டி கிளம்பியுள்ளது. இதற்கு தன்மானம் மற்றும் சுயமரியாதை போன்ற யாருக்கும் தலைவணங்காத பண்புகளைக் கொண்ட கலை, இலக்கியவாதிகள் பலி கடாவாக கொள்ளப்படுவதுதான் கவலைக்குரிய விடயம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -