அகமட் எஸ்.முகைடீன், ஹாசிப் யாஸீன்-
மீனவர்களின் மீன்பிடி படகுகள் மீன்பிடிப்பதற்காக கடலுக்குள் செல்வதற்கு தடை ஏற்படும் வகையில்ஓலுவில் துறைமுக நுழைவாயில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மீனவர்களின் குறித்த பிரச்சினைகள் தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்அர்ஜூனா ரணதுங்கவுடன் பிரதி அமைச்சர் ஹரீஸ் கலந்துரையாடினார். இதன் பலனாக அமைச்சர்ரணதுங்க குறித்த பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணை அகற்றுவதற்கு தேவையான நடவடிக்கையினைஉடனடியாக எடுப்பதாக பிரதி அமைச்சர் ஹரீஸிடம் உறுதியளித்துள்ளார்.
ஓலுவில் துறைமுக நுழைவாயில் பிரதேசத்தில் மண் வார்க்கப்பட்டு நிரம்பி காணப்படுவதனால் குறித்தபிரதேச மீனவர்கள் மீன் பிடியினை மேற்கொள்வதற்காக கடலுக்குள் தமது மீன் பிடி படகுகளைஎடுத்துச்செல்ல முடியாத நிலை காணப்படுவதனால் தமது அன்றாட ஜீவனோபாயம்பாதிக்கப்பட்டுள்ளதாக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் கவனத்துக்கு மீனவர்சங்கத் தலைவர் நசீர் உள்ளிட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள் கொண்டு வந்ததைத் தொடர்ந்து மேற்படிநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்கொண்ட உடனடி நடவடிக்கைக்கு அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசமீனவர்கள் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.