பௌத்தர்கள் எவரும் வாழாத மாணிக்கமடுவில் சிலை வைக்கப்பட்டிருப்பதால் எழுந்துள்ள பிரச்சினை பற்றி அமைச்சர்களான ரவூப் ஹக்கீம் மற்றும் மனோ கணேசன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்கவை நேற்று (8) சந்தித்து கலந்துரையாடினர்.
அமைச்சர் ஒருவரின் தலையீட்டால் இந்த சிலை வைக்கப்பட்டுள்ளதக அமைச்சர்கள் இருவரும் பிரதமரிடம் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அதே வேளை இவ்விடயம் தொடர்பாக நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்திலும் அமைச்சர் ஹக்கீம் இந்த விடயத்தை அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளார்.
இதுவொரு அனாவசியமான செயற்பாடு என்று ஜனாதிபதி தெரிவித்ததாக அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார்.
மேலும் குருநாகல் மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் இரு பள்ளிவாசல்கள் தாக்கப்பட்ட விடயம் குறித்தும் அமைச்சர் ஹக்கீம் அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.