இராணுவ சூழ்ச்சி அல்லது ஆட்சியை கைப்பற்றும் திட்டம் என கூட்டு எதிர்க்கட்சி கனவு கான்கிறது

அரசாங்கத்தை கவிழ்ப்பது படையினரின் பணியல்ல என வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

இராணுவ சூழ்ச்சி அல்லது ஆட்சியை கைப்பற்றும் திட்டமொன்று காணப்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி கூறி வருகின்றது.இதன்மூலம் கூட்டு எதிர்க்கட்சியின் மனோ நிலையை தெளிவாக புரிந்து கொள்ள முடிகின்றது.சதிப் புரட்சி மேற்கொள்வோ அரசாங்கத்தை கவிழ்க்வோ இராணுவத்தினர் நாட்டில் கடமையாற்றவில்லை.இந்த எண்ணம் இந்த மனோ நிலை கூட்டு எதிர்க்கட்சியின் நிலைப்பாடாகவே கருதப்பட வேண்டும்.

கூட்டு எதிர்க்கட்சியினர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிகின்றனர். எந்த வழியிலேனும் அரசாங்கத்தை கைப்பற்றிக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் கூட்டு எதிர்க்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -