குருநாகல் ரத்கருவ பிரதேசத்தில் கடத்தி வந்த காரொன்று உள்ளதாக என நேற்று இரவு 6.30 மணி அளவில் குருநாகல் பொலிஸ் நிலையதொலைபேசிக்கு இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அப்போது கடமையில் ஈடுட்படுள்ள பொலிஸார் அந்த இடத்திற்குச் சென்று பரிசோதனை மேற்கொண்ட போது அந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை கைது செய்ய முயற்சியில் ஈடுபட்ட வேளையில் பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த துப்பாக்கி சூட்டுக் இலக்காகி உயிரிழந்தவர் குருநாகல் குற்ற விசாரணைப் பிரிவில் சேவையாற்றுகின்ற உப பொலிஸ் பரிசோதகர் எல். எச். பி, தசாநாயக்க என்பவராவர். இன்னும் இரு பொலிஸ் அதிகாரிகள் இருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் ஒரு பொலிஸ் அதிகாரி அவரச சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குருநாகல் போதனா வைத்திசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது வரைக்கும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாகன போலி இலக்கத் தகடு இரண்டும், 9 மில்லி மீட்டர் கைத் துப்பாக்கி உட்பட கைப்பற்றப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர் இருவரும் மாத்தறை மற்றும் மொரட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக குருநாகல் பிரதான மஜிஸ்ட்ரேன் நீதவான் சம்பவம் நடந்த இடத்திற்கு இன்று வருகை தந்து பார்வையிட்டதுடன் குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.