ஹாசிப் யாஸீன்-
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுகளுக்கும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர்களுக்குமிடையிலான உயர்மட்ட சந்திப்பு நேற்றைய தினம் (21) இரவு 08:00 மணியவில் அகிலஇலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகத்தில் நடைபெற்றது.
அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்-ஷைக் முப்தி எம்.ஐ எம். றிஸ்விதலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் கூட்டத்தின் நோக்கம் பற்றி தெளிவுபடுத்தினார்.
ஜம்இய்யதுல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக், உள்ளிட்ட 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதன்போது பிரதி அமைச்சர் ஹரீஸ்,
தற்போது நாட்டில் காணப்படும் அசாதாரண நிலைமையினை கட்டுப்படுத்த முஸ்லிம் பாராளுமன்றஉறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் அத்துடன் தற்போது எழுந்துள்ளஐ.எஸ்.ஐ.எஸ் சர்ச்சை தொடர்பான விடயங்களை அணுகும் முறை பற்றியும் இனவாதத்திற்கு எதிரானமுன்னெடுப்புக்கள் பற்றியும் தெளிவுபடுத்தினார்.
மேலும் சிறுபான்மையினருக்கு எதிரான உள்நாட்டு, வெளிநாட்டு சதிகள் பற்றியும் விளக்கமளித்ததுடன் முஸ்லிம்கள் அமைப்புக்களை விமர்சிக்கமால் சமூகத்திற்கு எதிரான பொதுவான பிரச்சினைகளை எல்லோரும் ஒன்றிணைந்து முறியடிக்க முன்வர வேண்டும் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டார்.
மேற்குறித்த விடயங்கள் தொடர்பில் கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களும்கருத்துக்களை முன்வைத்தனர்.
முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை தணிக்கஅரசாங்கத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அத்துடன் முஸ்லிம் தனியார்சட்ட விடயத்திலும் ஐ.எஸ்.ஐ.எஸ் தொடர்பாக தற்போது எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில்இணைந்து செயற்படுவதாகவும் உறுதியளித்தனர்.