நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீமின் விசேட நிதியொதுக்கீட்டில் ரூபா 13568 மில்லியன் செலவில் காத்தான்குடி பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள பாரிய கழிவு நீர் அகற்றல் முகாமைத்துவ வேலைத்திட்டம்( sewerage systems) தொடர்பில் ஆராயும் விசேட குழு 04.11.2016 வெள்ளிக்கிழமை அன்று நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான முபீனின் ஏற்பாட்டில் காத்தான்குடிக்கு விஜயம் செய்தது.காத்தான்குடி கழிவு நீர் திட்டத்திற்குரிய பணிப்பாளரும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்கான உதவிப் பொது முகாமையாளருமான பொறியியலாளர்.
நசீல்,தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பிராந்திய முகாமையாளரும் தற்போதைய அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதம பொறியியலாளர்.வினோதன்,மட்டக்களப்பு மாவட்ட தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிரதம பொறியியலாளர்.காலிதீன் ஆகியோரை கொண்ட மேற்படி குழுவினர் காத்தான்குடி கழிவு நீர் முகாமைத்துவ வேலைத்திட்டம்(sewerage systems) தொடர்பில் காத்தான்குடி பதில் பிரதேச செயலாளர் ஹனீபாஅவர்களின் ஆலோசனைக்கமைய உதவிப் பிரதேச செயலாளர் அஹமட் அப்கர் மற்றும் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் அஜூன்(நளீமி) ஆகியோரினால் மேற்படி திட்டம் அமுல்படுத்தப்படவுள்ள காத்தான்குடியின் பல்வேறு பிரதேசங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள கழிவு நீர் சேகரிப்பு மையங்களுக்கான(Pumping Station) நிலங்களைப் பார்வையிட்டு மேற்படி புள்ளிவிபரத்தில் அடையாளப்படுத்தினர்.
காத்தன்குடிக்கு மிகவும் அவசியமான மேற்படி திட்டத்தினை அமுல்படுத்துவதில் மிகுந்த முயற்சியை நகர நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன் மேற்கொண்டு வருகின்றார்.கடந்த ஆட்சிக்காலத்தில் பெயரளவில் மாத்திரமே இத்திட்டம் கதைக்கப்பட்டு வந்ததே தவிர இத்திட்டம் தொடர்பிலான எந்த உத்தியோகபூர்வ வேலைகளும் நடைபெற்றிருக்கவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சராக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியத் தலைவர் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இணைப்புச்செயலாளர் முபீன் அமைச்சரிடம் அடிக்கடி இத்திட்டம் தொடர்பில் வலியுறுத்தி வந்தார்.இதன் பலனாக தலைவர் ஹக்கீம் துரித நடவடிக்கைகளை மேற்கொன்டதன் காரணமாக இத்திட்டம் 2017 ம் ஆண்டில் முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படவுள்ளது.
மேற்படி திட்டத்திற்கென ஐந்து ஏக்கர் நிலம் காத்தான்குடி பிரதேச செயலகம் மற்றும் இணைப்புச் செயலாளர் முபீன் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு அடையாளப்படுத்தப்பட்டதுடன் இக்காணியை உத்தியோகபூர்வமாக பெற்றுக்கொள்ள அரச நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன.இதேவேளை பேராதனைப் பல்கலைக்கழக விஞ்ஞான,பொறியியல்,சுற்றாடல் பிரிவினரால் இத்திட்டம் தொடர்பில் சுற்றாடல் சாத்திய அறிக்கையும் தயாரித்து கையளிக்கப்பட்டுள்ளது.மேலும் இத் திட்டத்திற்கான திட்டப் பணிப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளார்.
ரூபா 13568 மில்லியன் செலவில் அமுல்படுத்தப்படவுள்ள இப்பாரிய வேலைத்திட்டம் முழுக் காத்தான்குடியிலுமுள்ள அனைத்து வீடுகளினது கழிவுகளையும் இணைத்த வகையிலேயே மேற்கொள்ளப்படவுள்ளது.சீன அரசாங்கத்தின் சலுகைக் கடன் அடிப்படையில் வழங்கப்படவுள்ள நிதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டினூடாக இத்திட்டம் செயபற்டுத்தப்படவுள்ளது.
முழு இலங்கையிலுமே இரண்டு வீதம் மாத்திரமே இக்கழிவு நீர் முகாமைத் திட்டம் காணப்படும் நிலையில் தலைவர் ஹக்கீம் எடுத்துக்கொண்ட துரித நடவடிக்கைகள் காரணமாகவே இத்திட்டம் சாத்தியமாகியுள்ளது.நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதன் பின்னர் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் இரண்டு தடவைகளும் மற்றும் தனியாக ஒரு தடவையுமாக சீன நாட்டுக்கு விஜயம் செய்த அமைச்சர் ஹக்கீம் இத்திட்டம் தொடர்பில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.புதிய அரசாங்கத்தின் இறுக்கமான நிதிக் கொள்கையின் மத்தியிலும் இத்திட்டம் அமைச்சர் ஹக்கீமினால் காத்தான்குடி மக்களுக்கென நடைமுறைப்படுத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.