கருணா,பத்மநாதன் சுதந்திரமாக நடமாடும்போது அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் - சுவாமிநாதன்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பாரிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட கருணா , பத்மநாதன் போன்றோர் சுதந்திரமாக நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்றே பரிந்துரைத்துள்ளோம் என சிறைண்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார்.

அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பல நடவடிக்கைகள் மேற்கொண்டும் இதுவரை விடுதலை செய்யப்படவில்லை எனவும் இறுதியாக நவம்பர் 07ம் திகதிக்குள் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதாக பதிலளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட 16 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒப்பமிட்ட, ஓர் அவசர மனு ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இவ்வாறு கூட்டமைப்பினால் அனுப்பி வைக்கப்பட்ட மனு தொடர்பில் சிறைச்சாலை அமைச்சரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பாரிய சம்பவங்களுடன் தொடர்புபட்ட கருணா , பத்மநாதன் போன்ற பலர் சுதந்திரமாக வெளியில் நடமாடும்போது சிறு குற்றம் புரிந்த கைதிகளையும் விடுதலை செய்யலாம் என்றே பரிந்துரைத்துள்ளோம் . குறிப்பாக நீண்ட காலம் தடுப்பில் இருத்ததன் அடிப்படையில் இவர்களை மன்னிப்பின் அடிப்படையில் விடும் அதிகாரம் அமைச்சிற்கு கிடையாது. ஆனால் அது ஜனாதிபதியினால் மட்டுமே முடியும்.

இதன் காரணத்தினால் தற்போது கைதிகளாக சிறயைிலுள்ளவர்களில் பலரை மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் எனும் பரிந்துரையை நாமும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளோம். 

கூட்டமைப்பின் சார்பில் கடந்த காலங்களில் இது தொடர்பில் முன்வைத்த கோரிக்கைகளுக்கு அவகாசம் கோரப்பட்டிருந்த்து. அது நிறைவுறும் நிலையில் இதனை அவர்கள் கோரியிருக்கலாம். இருப்பினும் இது தொடர்பாக ஆராய்ந்து ஆக்கபூர்வமான நடவடிக்கை இடம்பெறவேண்டும் என்றே நாமும் கருதுகின்றோம் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -