பெயரளவில் மட்டும் நடாத்தப்படுகின்ற ஒரு நடமாடும் சேவைகளாக இது அமையக்கூடாது - அமைச்சர் நஸீர்





அபு அலா -
பெயரளவில் மட்டும் நடாத்தப்படுகின்ற ஒரு நடமாடும் சேவைகளாக இது அமையக்கூடாது என்றும் மக்களுக்கு நன்மைகள் பயக்கக்கூடிய சேவைகளாக இது அமையவேண்டும் என்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

இவ்வாறான நடமாடும்சேவை நடத்துவதாக இருந்தால் குறித்த பிரதேச மக்களுக்கு சரியான முறையில் அறிவித்தல் வழங்கப்பட்டிரிக்கவேண்டும். இந்த அறிவித்தல் சரியான முறையில் பொதுமக்களிடத்தில் வழங்கப்படவில்லை என்பதை நினைக்கும்போது ஒரு கவலையாகவுள்ளது என்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் கூறினார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் கீழ் இயங்கும், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நடமாடும் சேவை, குறித்த பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் நேற்று (19) சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச சபைக் காரியாலத்தில் இடம்பெற்றது.

இதன் போது, பணியகத்தின் நல்லிணக்கப் பிரிவு, பயிற்சிப் பிரிவு, விசேட புலனாய்வுப் பிரிவு, சந்தைப்படுத்தல் பிரிவு மற்றும் மனித ஆட்கடத்தலுக்கு எதிரான பிரிவு ஆகியவற்றின் மூலம் சேவைகள் வழங்கப்பட்டன.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் இந்த நடமாடும் சேவையை ஆரம்பித்து வைத்து உரையாற்றும்போது மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்களின் குறைகளை கண்டறியும் நோக்கிலும் அதற்கான தீர்வுகளை வழங்கும் வகையிலேயே இவ்வாறான சேவைகளை மக்களின் காலடிக்கு எடுத்துச் சென்று இந்த சேவைகள் நடாத்தப்பட்டு வருகின்றது.

இதன் மூலம் பொதுமக்கள் பல நன்மைகள் அடையவேண்டும் என்பதற்காக இன்றைய நல்லாட்சி அரசு பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை செலவு செய்து அதற்காக பல உயர் அதிகாரிகளையும், உத்தியோகத்தர்களையும் இச்சேவையில் ஈடுபடுத்தியும் வருகின்றது.

இவ்வாறு முன்னெடுக்கப்படுகின்ற இந்த நடமாடும் சேவைகளை நடாத்துவதற்கு முன்னர் பொதுமக்களுக்கு சரியான முறையில் அறிவித்தல் வழங்கியிருக்கப்படல் வேண்டும். இது அவ்வாறு இடம்பெறவில்லை என்பது ஒரு கவலை தரக்கூடியதாக உள்ளது.

பெயரளவில் மட்டும் நடாத்தப்படுகின்ற ஒரு நடமாடும் சேவைகளாக இது அமையக்கூடாது என்றும் மக்களுக்கு நன்மைகள் பயக்கக்கூடிய சேவைகளாக இது அமையவேண்டும் என்று கோரிக்கொண்டார்.

இந்த நடமாடும் சேவையை கிழக்கு மாகாணத்தில் விஷேடமாக அம்பாறை மாவட்டத்தில் அதுவும் எனது பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதையிட்டு நான் சந்தோஷமடைகின்றேன்.

அத்துடன் இதனை ஏற்பாடு செய்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் றஊப் ஹக்கீமுக்கும் எனது நன்றியையும் தெரிவித்துக்கொள்ளும் இதேவேளை அமைச்சின் உதவிச் செயலாளர் சதுரி நாகந்தல, வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் செயற்பாட்டு இயக்குநர் உபுல் தேச பிரிய, இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையத்தின் நிருவாக மற்றும் மனித வளப் பிரிவு முகாமையாளர் ஏ.எம்.எம். உமராத் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அம்பாறை மாவட்ட அலுவலகத்தின் பொறுப்பதிகாரி பிரதீப் வீரதுங்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துகொள்கின்றேன் என்றார்.

இதேவேளை, வெளிநாட்டு தொழில்களை எதிர்பார்ப்போருக்கு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்தினூடான வழி காட்டல்களும் இங்கு வழங்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவை நேற்றுக் காலை 9.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நடைபெற்றது. இச்சேவையில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றுக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -