மஹிந்தவின் புதிய கட்சிக்கு : உள்ளே எதிர்ப்பாம்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமைத்துவத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெரிதும் பேசப்பட்டதுடன், அது தொடர்பான பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டன. அந்த புதிய கட்சியின் பிரதான செயலாளர் பதவி பவித்ரா வன்னியாராச்சிக்கு வழங்கப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது. எனினும் தற்போது அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது கூட்டு எதிர்க்கட்சியின் பெரும்பான்மையினர் பசில் எதிர்ப்பு கொள்கையை பின்பற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எதிர்ப்பிற்கு முன்னணியில் இருப்பது மஹிந்தானந்த அலுத்கமகே என தெரிவிக்கப்படுகின்றது.

அவருக்கு ஆதரவாக வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச, பவித்ரா வன்னியாராச்சி போன்ற உறுப்பினர்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கமை எதிர்வரும் நாட்களில் கூட்டு எதிர்க்கட்சி பாரிய பிளவு ஒன்று ஏற்படக்கூடிய அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

சமகால அரசாங்கத்திற்கு எதிராக புதிய கட்சி உருவாக்கத்திற்கு எதிராக மஹிந்த தரப்பினர் கடும் எதிர்ப்பினை வெளியிடுவதாக தன்னிடம் கூறியதாக, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான WDJ செனவிரத்ன நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -