அமைச்சரே.....நீங்கள் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை விரும்புகின்றீர்களா.....? கிழக்கு மாகவைணத்தின் இறக்காமம் கிராமத்தின் மானிக்கமடு என்ற பகுதியில் புத்தர் சிலை ஒன்று க்கபட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களின் உரிமைகளை முடக்கி கொண்டு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை வளர்க்கும் ஓர் இனவாத செயலாகவே தமிழ் பேசும் மக்கள் பார்க்கின்றனர்.
இப்புத்தர் சிலை தொடர்பாக அம்பாரை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் அம்பாரை பிரதேசத்தை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர், இரக்காமம் பிரதேச செயலாளர் பிரிவில் தொல்பொருள் ஆராய்ச்சி தினைக்களம் 19 இடங்களை புராதன் இடஙகளாக அடயாளப்படுத்தியுள்ளதெனவும் இதில் மாணிக்கமடு என்ற பகுதியும் ஒன்றெனவும் புதிய விளக்கம் கூறுகின்றார்.
அத்துடன் வடக்கு-கிழக்கு உட்பட நாட்டின் தமிழ் பேசும் பிரதேசங்களில் அதிலும் பௌத்தமக்கள் வசிக்காத பகுதிகளில் ஏன் இவ்வாறு புத்தர் சிலையை நிறுவுகின்றார்கள்.இவ்வாறு சிலைவைப்பதன் மூலம் சமயத்தை வளர்ச்சி பெறச் செய்யலாமென நினைப்பது சமய வளர்ச்சியாகது அது மதவாத செயலாகும். யுத்த நிலைமைகாரணமாக எமது மக்கள் கிராமங்களை விட்டு வெளியேறி இன்னும் மீள்குடியேற்றப்படாத பகுதிகளில் இருந்து தமிழ், முஸ்லிம்களின் காணிகளை சுவடுகளை அகற்றி அவ் இடங்களில் புத்தர் சிலையை நிறுவுகினர். இதற்க்கு இராணுவத்தினர் தமது ஊக்குவிப்பயும் பங்களிப்பயும் வளங்குகின்றனர்.
இவை பற்றி ஏற்கனவே பல தடவை ஊடகவியளாலர்கள் அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டி இருந்தும் நிறுவபட்ட புத்தர் சிலைகள் அகற்றபடவே, பள்ளிவாசல்கள் தாக்கபடாமல் இருப்பதையே அரசால் தீர்க்கமான முடிவு எதுவும் எடுக்கபடவில்லை யென்பதே யதார்த்தமாகும். தற்போது நல்லாட்சி அரசாங்கதின் அமைச்சர் தயாகமகே வெளியிட்டிருக்கும் 'பாக்கிஸ்த்தான் மண்ணை தோண்டினாலும் புத்தர் சிலை வெளிப்படும்......கல்முனையும் பொத்துவிலும் கூட தீகவாபி விகாரைக்கு சொந்தமான காணியாக இருந்துள்ளது'.... என்ற கருத்தானது முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் செயலாக மட்டுமல்லாமல் நல்லாட்சியின் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் தவிடு பொடியாக்கியுள்ள்து அமைச்சரே.......
1.பௌத்த சிங்கள பேரினாவாதத்தால் தமிழர்களை நசுக்கியது போன்று முஸ்லீம்களையும் நசுக்க என்னுகிறீர்களா...?
2.முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை விரும்புகின்ரீர்களா...? வேண்டாம் மீண்டும் ஒரு யுத்தம். கட்ந்த தேர்தலில் 20,000 இற்க்கும் மேற்பட்ட வாக்குகளை அழித்த முஸ்லீம்களுக்கு சேவை செய்யாவிட்டாலும் பரவாஇல்லை அநியாயம் செய்ய வேண்டாம்.. இன ஐக்கியத்தை பேணுவதாகவும், சகல மதங்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்பதாகவும் கூறிக்கொள்ளும் நல்லாட்சி அரசு இவ்வாரன மத அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து மத உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்
2.முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை விரும்புகின்ரீர்களா...? வேண்டாம் மீண்டும் ஒரு யுத்தம். கட்ந்த தேர்தலில் 20,000 இற்க்கும் மேற்பட்ட வாக்குகளை அழித்த முஸ்லீம்களுக்கு சேவை செய்யாவிட்டாலும் பரவாஇல்லை அநியாயம் செய்ய வேண்டாம்.. இன ஐக்கியத்தை பேணுவதாகவும், சகல மதங்களுக்கும் சம அந்தஸ்து கொடுப்பதாகவும் கூறிக்கொள்ளும் நல்லாட்சி அரசு இவ்வாரன மத அழிப்பு நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவந்து மத உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும்
சகல மதங்களுக்கும் சம அந்தஸ்து எனக் கூறிக்கொண்டு இது தொடர்பாக எத்தனையோ கருத்தரங்குகள், கலந்தாலோசனைகளை நடத்தும் அரசு மறுபுறம் மத அழிப்பு நடவடிக்கைகளை கண்டு கொள்ளாத நிலையில் இருப்பது எமக்கு மிகுந்த வேதனை அழிக்கிறது. எனவே மேற் சென்னவாறு பௌத்த மதத்தை வளர்கின்றோமெனக் கூறிக் கொண்டு பிறமதங்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை தடை செய்வதோடு தொல்பொருள் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்க பட்ட புராதன இடங்களாக முத்திரை குத்துவதையும் தடை செய்ய வேண்டும். ஒவ்வொரு மதத்தினரும் தமது மதக்கடமைகளை சுதந்திரமாகவும் இடையூறுகளின்றியும் நிறைவேற்ற உறிதி செய்ய வேண்டுமனெ முஸ்லீம் இளைஞர்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்..
M.Z.M. சஹ்ரான்