ஒலுவில் துறைமுகத்தில் மண் வார்ப்பு - பிரதி அமைச்சர் ஹரீஸ் உடனடி நடவடிக்கை

அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
மீன்பிடி இயந்திரப் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்வதற்கு தடையாக ஒலுவில் துறைமுகத்தின் நுழைவாயில்வாக்கப்பட்டுள்ள மண்ணை அகற்றும் பணி விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் சொந்த நிதிஒதுக்கீட்டின் மூலம் நேற்று (22) செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக்உள்ளிட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுண ரணதுங்க குறித்த பிரதேசத்தில் நிரம்பியுள்ள மண்ணைஅகற்றுவதற்கு தேவையான நடவடிக்கையினை தனது அமைச்சின் மூலம் மேற்கொள்வதாக விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சர் ஹரீசிடம் வாக்குறுதி அளித்திருந்தார்.

இருந்தபோதிலும் அப்பணியினை மேற்கொள்வதற்கு அலுவலக நடைமுறைகள் பின்பற்றப்படவேண்டியுள்ளமையினால் காலதாமதம் ஏற்படும் என்பதை அறிந்த பிரதி அமைச்சர் ஹரீஸ், குறித்த பிரச்சினைமீனவர்களின் அன்றாட ஜீவனோபாயத்துடன் தொடர்புடையது என்பதால் தற்காலிக தீர்வாக தனது சொந்தநிதியிலிருந்து மேற்படி மண் அகற்றும் பணியினை மேற்கொண்டு இயந்திர படகுகள் கடலுக்குச் செல்வதற்கானவழியினை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அமைச்சரிடம் வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிக்கு அமைவாக இதற்கான நிரந்தர தீர்வினை துறைமுக மற்றும் கப்பல்துறை அமைச்சு மேற்கொள்ளவுள்ளது.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் முயற்சியின் பலனாக மீனவர்களின் இயந்திர படகுகளை தற்காலிகமாகஒலுவில் துறைமுக பிரதேசத்தில் நங்கூரமிட்டு வைப்பதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆழ்கடல் மீனவர்கள் தமது இயந்திரப் படகுகளை துறைமுக பிரதேசத்தில் தரிக்கச்செய்து மீண்டும்மீன்பிடியினை மேற்கொள்வதற்காக இலகுவாக கடலுக்குச் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -