ஏ.எம்.றிகாஸ்-
நாட்டிலுள்ள இனவாத சக்திகளுக்கு எதிராகவும் தற்போது எற்பட்டுள்ள நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தியும் இந்துசமய குருக்களின் பங்கேற்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணியொன்று இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது.
மட்டக்களப்பு இந்து குருக்கள் பேரவையின் ஏற்பாட்டில் செங்கலடி பிரதேசத்தில் நடைபெற்ற இந்த அமைதிப் பேரணியில் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த இந்து மத குருக்கள் பங்கேற்றனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதான சூழ்நிலையை குழப்புவதற்கு முயற்சிக்கும் இனவாத சக்திகளுக்கு எதிராக இந்த பேரணி நடைபெற்றது.
இப்பேரணியில் கலந்து கொண்டவர்கள் இனவாதத்தை தூண்டும் சக்திகளைகண்டிக்கும் வாசகங்களைக் கொண்ட சுலோகங்களை ஏந்திச் சென்றனர்.
செங்கலடி பலநோக்குக் கூட்றவுச் சங்கத்தின் முன்பாக இருந்து ஆரம்பமான இப்பேரணி அமைதியாகச் சென்று செங்கலடி முச்சந்தியில் முடிவுற்றது.
ஜனாதிபதி மைத்திரிப்பால சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோருக்கான மகஜர்கள் இங்கு கையளிக்கப்பட்டன.