ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபுர்வ இணையத்தளத்துக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டுடன் சம்பந்தப்பட்ட 17 வயதுடைய பாடசாலை மாணவனை 3 வருடங்களுக்கு நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவருமாறு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட் நீதிபதி கிஹான் பிலபிடிய நேற்று (11) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். குறித்த மாணவன் பெற்றோரின் பராமறிப்பில் இருக்கும் நிலையிலேயே நன்னடத்தை அதிகாரிகளின் கண்காணிப்புக்கும் உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் இணையத்தளத்துக்குள் பிரவேசித்த குறித்த மாணவனுக்கு மாலைத்தீவைச் சேர்ந்த ஒருவருடன் தொடர்பிருப்பதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.