மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ தான் வேலை செய்வதில்லை என மாகாண சபைகள் மற்றும் உளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மன்றத்தினர், 2012 ஆம் ஆண்டு 22 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (திருத்த) சட்டத்தில் உள்வாங்கப்படவுள்ள விடயங்கள் தொடர்பில் 10 விடயங்கள் உள்ளடக்கப்பட்ட மனு ஒன்றினை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் அமைச்சரிடம் கையளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மனுவினை பெற்றுக்கொண்டதனை தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி மற்றும் அமைச்சின் உத்தியோகத்தர்கள் சிலரும் கலந்துகொண்டனர். கலந்துரையாடலின் போது அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்:-
"ஜனநாயக முறையில் உள்ளூராட்சி தேர்தலை நடாத்த வேண்டும் என்ற உங்களுடைய கோரிக்கையை வரவேட்கிறேன். இந்த அமைச்சுடன் யாரும் மோதவில்லை. நீங்கள் வரவேண்டுமென்ற அவசியம் இல்லை கடிதம் ஒன்றினூடாக விடயத்தை கூறியிருந்தால் போதும், தேவையான நடவடிக்கைகளை நான் முன்னெடுப்பேன்.
2012 ஆம் ஆண்டு22 ஆம் இலக்க உள்ளூராட்சி அதிகாரசபை தேர்தல்கள் (திருத்த) சட்டத்தின் குறை நிறைகளை சரி பார்த்துக்கொண்டிருக்கின்றோம். பாராளுமன்ற உப குழுவின் அடுத்த ஒன்றுகூடலுக்கு உங்களையும் அழைக்கின்றேன். நீங்கள் முன்வைத்துள்ள இவ்விடயங்களை முன்வையுங்கள். உங்கள் வேண்டுகோளை அரசிடம் முன்வைப்பதற்கு நான் பொறுப்பெடுக்கின்றேன். எல்லா நிர்ணயம் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் தொழில்நுட்ப பிரச்சனைகளுக்கான திருத்தங்கள் நடக்கின்றன. அதே போன்று இந்த அனைத்து திருத்தங்களுக்கு அமைச்சரவையின் மாற்று பாராளுமன்றத்தின் ஒப்புதல் தேவை."
இதன் போது கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மன்றத்தினர்அமைச்சரிடம் கேட்ட கேள்விங்களுக்கு பதிலளிக்கையில், "தேர்தலை விரைவில் நடாத்தக்கோரி நிட்கின்றனர், இந்த நாட்களில் பாராளுமன்றத்திலும் அதிகமாக பேசப்படுகின்ற விடயமும் இதுதான். சிலருக்கு இப்போது அரசியல் மேடை கிடைப்பதில்லை அதனாலேயே என் மீது கூட்டம் சுமத்துகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மற்றும் பல குழுக்கள் விரைவில் உள்ளூராட்சித் தேர்தல்களில் வைக்குமாறு கூறுகிறார்.
மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் ஒரு கட்சிக்காகவோ அல்லது ஒரு குழுவுக்காகவோ என்னால் வேலை செய்ய முடியாது. அமைச்சர் என்ற வகையில் நான் மக்களுக்கு பொறுப்புக்கூற வேண்டும். கட்சிக்கு எதிரானாலும் எல்லை நிர்ணயம்தொடர்பில் நான் தீர்மானங்களை எடுப்பேன். எந்த ஒரு கட்சியும் கடந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த அரசாங்கத்தின் அறிக்கைக்கு அமைய தேர்தல் நடந்தால் பல பிரச்சசினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும். நாளை எல்லை நிர்ணய அறிக்கை எனக்கு சமர்பிக்கப்பட்டாலும் நான் தேர்தலை நடாத்த நடவடிக்கைகளை உடனே முன்னெடுப்பேன்" என அமைச்சர் தெரிவித்துள்ளார்.