மலையகத் தமிழ் மக்கள் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் அதிகம் வாழந்தபோதும் எல்லாமாவட்டங்களிலும் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் இன்று ஒரே நாளில் கேகாலைமாவட்டத்தில் 2கோடி 60 லட்சம் பெறுமதியான வேலைத்திட்டங்களை அமைச்சர் பழநி திகாம்பரத்தின் வழிகாட்டலில்செய்யமுடிந்முள்ளது. கேகாலை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் இல்லாத குறையை நாம் நிவர்த்தி செய்வோம் என தமிழ்முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
உலக வங்கி அணுசரணையுடன் மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் முன்னடுக்கப்பட்டுவரும் 'சிறுவர்கள் அபிவிருத்தி நிலையங்களை' அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் யட்டியந்தொட்ட -பணாவத்தை, தெஹயோவிட்ட - சப்புமல்கந்தை, தெரணியகல- அங்ஹிட்டகந்த மற்றும் கலிகமுவ ஆகிய தோட்டங்களில் அடிக்கல்நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
மலையகத் தோட்டப்பகுதிகளில் பிள்ளைக் காம்பிரா அல்லது பிள்ளை மடுவம் என அழைக்கப்படும் சிறுவர் பராமரிப்பு நிலையங்கள்ஒரு கலாசார கூறாகவும் அமைந்துவிட்டது. இது இன்று நேற்றல்ல மலையக சமூகம் இந்தியாவில் இருந்து வந்த நாட்களில் இருந்துதேயிலை, இரப்பர் மரங்களில் தொட்டில் கட்டி பிள்ளைகளை தொங்கவிட்டு தம் தொழிலை செய்து வந்தனர். அதனைப் பார்த்துவளர்ந்த குழந்தைகளும் பர்மபரையாக தொழிலாளியாக வே வழிவந்தனர். எனினும் இந்த நிலைமையை தொடர்ந்து அனுமதிக்கமுடியாது. தற்போது மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் சிறுவர் பராமரிப்புநிலையங்களாக அல்லாமல் சிறுவர் அபிவிருத்தி நிலையங்களாக மாற்றும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இவற்றை முன்பள்ளிகளாக மாற்றியமைப்பதே எமது திட்டமாகவுள்ளது.
இந்த வேலைத்திட்டத்திற்காக ஒரு நிலையத்துக்கு 65 லட்சம் செலவிடப்படுகின்றது. இது சராசரியாக 25 தொழிலாளர்களின் ஊழியர்சேமலாப நிதிக்கு சம்மானதாகும். சுமார் 40 வருடங்கள் 25 தொழிலாளர்களின் உழைப்பின் பெறுமதிக்கு ஒப்பான பணம் இந்த சிறுவர்அபிவிருத்தி நிலையங்களாக களுக்காக முதலீடு செய்யப்படுகின்றது. இது இன்றைய குழந்தைகளின் எதிர்காலத்திற்கானமுதலீடுகளாகும். இதனை மலையக மாவட்டங்கள் தோறும் அமைச்சர் திகாம்பரம் தமது அமைச்சின் ஊடாக முன்னெடுத்துவருகின்றார். நாங்கள் அவரது பணிகளுக்கு உதவியாக செயற்படுகின்றோம். நான் நுவரெலியா மாவட்ட மக்கள் பிரதிநிதியாக தெரிவுசெய்யப்பட்டபோதும் மலையக பாராளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலிமாவட்டங்களுக்கும் சென்று அமைச்சினால் முன்னெடுக்கும் பணிகளுக்கு எனது ஒத்துழைப்பை வழங்கி நமது மக்களைஅணிதிரட்டி வருகின்றேன்.
கடந்த மாகாண சபை தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டிருக்கவில்லை. ஆனாலும் அப்போதும் ஒரு கூட்டணிஉருவானது. சப்ரகமுவ மாகாண சபை தேர்தலில் அந்த கூட்டணியை அமைக்க நாம் எத்தணித்து ஒரு கட்சியின் வருகையினால் பின்னர் தொழிலாளர் தேசிய சங்கம் அந்த கூட்டணியில் இருந்து விலகிக் கொண்டதுடன் தமிழ் மக்கள் பிரதிநிதித்துவத்தை இழந்துவிடும் என போட்டியிடாது ஒதுங்கியிருந்தோம். எமது தோழமைக் கட்சியான மலையக மக்கள் முன்னணி மற்றும்ஜனநாயக மக்கள் முன்னணி ஆகியன கூட்டணிக்கு ஒத்துழைப்பு வழங்கின. எனினும் அந்த கூட்டணியில் வெற்றிபெற்றவர்கள் வெற்றியை தொடர்ந்து கூட்டணியையும் மறந்தனர். மக்களையும் மறந்தனர். இன்று சப்ரகமுவ மாகாண சபையில் இரண்டுமலையக தமிழ் உறுப்பினர்கள் உள்ளனர். என்பதையே மக்கள் மறந்துவிட்டனர். தமிழ் முற்போக்கு கூட்டணி அமைக்கப்பட்டபின்னரே மலையகத்தில் பரவலாக அபிவித்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது எனவும். தெரிவித்தார் .
இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் ரஞ்சித் பொல்கம்பொல, தமிழ் முற்போக்கு கூட்டணியின் இரத்தினபுரி மாவட்டஅமைப்பாளர் சந்திரகுமார், தொழிலாளர் தேசிய சங்கத்தின் கேகாலை மாவட்ட பிரதிநிதி சோமசுந்தரம், அமைப்பாளர் மந்திரி குமார்,இணைப்பாளர் முத்துகுமார் மற்றும் அமைச்சர் கபீர் ஹாசிம் இன் இணைப்பு செயலாளர் ரமேஷ், பாராளுமன்ற உறுப்பினர் சுஜித்சஞ்சீவ பெரேரா வின் சார்பில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சி.கே.முருகேசு மற்றும் ட்ரஸ்ட் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.