கௌரவ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக்கின் வேண்டுகோளுக்கமைவாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் அவர்களினூடாக கிழக்கு மாகாண சபை நிதி ஒதிக்கீட்டிலிருந்து இரண்டு கோடி ரூபா செலவில் காத்தான்குடி அன்வர் பாடசாலைக்கு புதிதாக இரண்டு மாடிகட்டடம் ஒன்றை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ கிழக்கு மாகாண முதலமைச்சர் அல்ஹாபில் Z.A. நசீர் அஹமட் அவர்களும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் M. ஷிப்லி பாறூக் அவர்களும் ஏனைய அததிகிளாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் M.T.A. நிசாம், மட்டக்களப்பு மத்தி வலயக்கல்விப் பணிப்பாளர் M.I. சேகு அலி மறறும் நகர திட்டமிடல் நீர் சழங்கல் அமைச்சின் இணைப்பாளர் U.L.M.N. முபீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது உரையாற்றிய பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
இந்த பாடசாலைக்கான கட்டடம் ஒன்றை அமைப்பதற்கு கல்வி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உள்ளவாங்கப்பட்டிருந்த போதும் துரதிஸ்டவசமாக அந்த பட்டியலிலிருந்து அது நீக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு வருடமும் சுமார் 200 தொடக்கம் 250 மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படும் இப்பாடசாலைக்கு எவ்வாறாயினும் கட்டிடம் ஒன்றினை அமைக்க வேண்டும் என்று கௌரவ முதலமைச்சர் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளினை அடுத்து இரண்டு மாடி கட்டடம் ஒன்றை அமைப்பதற்கான நிதியினை பெற்றுக்கொடுத்துள்ளார்.
இருந்த போதிலும் எதிர்கால தேவை கருதி இக்கட்டிடத்தினை மூன்று மாடி கட்டடமாக அமைப்பதற்கான கோரிக்கையினை முதலமைச்சருக்கு விடுத்தபோது அதற்கான நிதிகளை பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்துள்ளார். எனவே அமைக்கப்படவுள்ள இக்கட்டிடமானது மூன்று மாடி கட்டட தொகுதிக்குரிய அஸ்திவாரம் இடப்பட்டு அமைக்கப்படவுள்ளது.
மேலும் 800 மாணவர்களுக்கு மேல் கல்வி கற்கும் இப்பாடசாலைக்கு மலசலகூட வசதி இல்லை என்ற விடயத்தை அதிபர் அவர்கள் கூறியபோது நாங்கள் முதலமைச்சரிடம் அதற்கான கோரிக்கையினை விடுத்து தற்போது மலசலகூடம் அமைக்கும் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன.
எனவே எமக்கு மக்கள் வழங்கிய அதிகாரத்தினூடாக கல்வி மற்றும் ஏனைய அனைத்து அபிவிருத்திகளிலும் தொடர்ந்தும் பாரிய முன்னேற்றங்களை கிழக்கு மாகாண சபையூடாக மேற்கொள்ளவுள்ளோம் என தெரிவித்தார்.