அரசுக்கு எதிராய் சம்மாந்துறையில் எஸ்.எல்.ரி.ஜே.யின் மாபெரும் கண்டன பேரணி

எம்.வை.அமீர் -

GSP+
சலுகையைப் பெறுவதற்காக அமுலில் உள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக அரசு முனைப்புக்களை மேற்கொள்வதாகவும் குறித்த மாற்றத்தை தாங்கள் ஒருபோதும் அங்கீகரிக்கப் போவதில்லை என்பதை வலியுறுத்தியும் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் 2016-11-11 ஆம் திகதியன்று மாபெரும் கண்டனப் பேரணியை எஸ்.எல்.ரி.ஜே. என்ற முஸ்லிம் அமைப்பு நடத்தியது.

ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் பங்குகொண்ட பேரணியில் “இலங்கை அரசே! இலங்கை அரசே! கைவைக்காதே கைவைக்காதே முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!” அரசியல் யாப்பு உறுதிப்படுத்திய முஸ்லிம் தனியார் சட்டத்தில் கைவைக்காதே!, எச்சரிக்கை! எச்சரிக்கை! நல்லாட்சியே எச்சரிக்கை! முஸ்லிம் உரிமையில் மூக்கை நுழைக்கும் நல்லாட்சியே எச்சரிக்கை! எங்கள் உரிமையை பறிக்க நினைத்தால் எழுந்து நிற்போம் இமய மலையாய்! ஆர்ப்பரிப்போம் கடலலையாய்! மஹிந்தவை வீழ்த்தியது போன்று மைத்திரி ஆட்சிக்கும் முடிவு கட்டுவோம் என்பன போன்ற பாதாதைகள் ஏந்தியிருந்ததுடன் உரத்தகுரலில் கோஷங்களும் எழுப்பப்பட்டன.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -