அப்துல்சலாம் யாசீம்-
கடார்- ஹொரவ்பொத்தானை நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் ஹொரவ்பொத்தானை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 14 பாடசாலைகளிலும் 2016ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும் 2017ம் ஆண்டு பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது பெற்றோர்களை ஊக்குவிக்கும் செயலமர்வு இன்று (19) பிரதேச சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
ஹொரவ்பொத்தானை பிரதேசத்தில் கல்வி பயின்ற 11 மாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்டனர். இதில் எம்.ஜே.எம்.ரஸீன் 172 (வலஹவித்தவெவ)
ஏ.ஆர்.எம்.ரிமாஸ் 167 (அங்குநொச்சிய) எம்.பீ.எப்.நூஹா 167 (அங்குநொச்சிய) எச்.எம்.இபாஸ் 163 (அங்குநொச்சிய) ஏ.எச்.எப்.பஸ்ரினா 160 (அங்குநொச்சிய) ஏ.எம்.எப்.முர்சிதா 159 (அங்குநொச்சிய) எம்.எச்.எப்.நாசீரா 157 (வீரச்சோலை) எம்.எம்.மபாஸ் 156 (ரத்மலை) எம்.கே.எம்.சதாத் 156 (பத்தாவ) எஸ்.எப்.சசிஹா 154 (ஹொரவ்பொத்தானை) என்.எம்.நிம்ஸாத் 154 (அங்குநொச்சிய) ஆகியோர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் தலைமையுரையை அஷ்ஷேஹ் எஸ்.எம்.சுபியான் (நளீமி) நடாத்தியதுடன் பஸீர் மொஹிடீன் மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கினார்.இந்நிகழ்வில் அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.