ஆதிப் அஹமட்-
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் வேண்டுகோளின் பெயரில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் விக்டரி விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர் அரங்கு அமைப்பதற்காக ரூபாய் ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைவாக இப் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான அடிக்கல் நடும் வைபவம் அண்மையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் நகர நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் யு.எல்.எம்.என்.முபீன், ஆரையம்பதி பிரதேச சபையின் செயலாளர் கிருஷ்ணபிள்ளை, விக்டரி விளையாட்டுக் கழக தலைவர், செயலாளர், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
இவ்வைபவம் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.