இலங்கையில் முதல் முறையாக சிகரெட் கொள்வனவு செய்வதற்கான பெண்கள் உட்பட பெருமளவானோர் வரிசையில் காத்திருந்திந்த சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியுள்ளது.
அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிகரெட் விற்பனை செய்யப்படும் கடையொன்றில் இவ்வாறு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.
இலங்கையில் இன்றுமுதல் பெறுமதி சேர்க்கப்பட்ட வரி அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதன்காரணமாக சிகரெட்டின் விற்பனை விலையில் பாரியளவு அதிகரிப்பு ஏற்படவுள்ளது. இதனை கருத்திற் கொண்டு முன்கூட்டியே கொள்வனவு செய்ய நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்துள்ளனர்.
இதேவேளை, போலியாக தட்டுப்பாடு என கூறி அநுராதபுரம் நகரத்தில் உணவகங்கள் மற்றும் கடைகள் பலவற்றில் 42 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட வேண்டிய சிகரெட் ஒன்று 60 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. (ஸ்ரீலங்கா முஸ்லிம்)