கத்தாரின் தலை நகரம் தோகாவிலுள்ள பனார் அரங்கில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் கடந்த 19ஆம் திகதி கத்தாரிலுள்ள இலங்கை வாழ் சகோதரர்களை சந்தித்ததுடன், நாட்டில் நடைபெறுகின்ற சமகால அரசியல் சம்பந்தமான உரையொறையும் நிகழ்த்தினார்.
தங்கள் தேசிய தலைவரின் வருகையை அறிந்து, கத்தாரில் பணிபுரிகின்ற எமது சகோதரர்கள் கத்தார் நாட்டின் பலபாகங்களிலிருந்தும் எந்த வித அழைப்புக்களும் இன்றி வந்து சேர்ந்தார்கள்.
தலைவருடனான சாதாரண சந்திப்பு என்றிருந்த அந்த நிகழ்வானது இறுதியில் மாநாடு போன்று முஸ்லிம் காங்கிரஸ் போராளிகளினால் நிறைந்திருந்தது.
இறுதியில் தலைவர் உரையினை முடித்துவிட்டு செல்கின்றபோது போராளிகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தலைவருக்கு சலாம் கொடுப்பதற்கு முண்டியடித்துக்கொண்டு சென்றதனை காணக்கூடியதாக இருந்தது. இவ்வாறு ஒவ்வொரு கூட்டங்களிலும் நடைபெறுவது வழமையாகும்.
இதனை நேரடி ஒளிபரப்பின் மூலம் பார்த்துவிட்டு பொறுத்துக்கொள்ள முடியாத காழ்ப்புணர்ச்சி கொண்ட, முகநூல் மூலம் சில போலி விமர்சனம் செய்கின்ற மாற்றுக்கட்சியை சேர்ந்த சில சகோதரர்கள் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரவவிடுவதனை காணக்கூடியதாக இருக்கின்றது.
தலைவர் சாய்ந்தமருது கூட்டத்தில் கூறியதுபோன்று அடுத்த தேர்தலுடன் இவர்கள் அனைவரும் குரங்கு விசாவில் துபாய்க்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள்.
அதாவது இவர்களை வளினடாத்திய தலைமைகள் தேர்தல் மூலம் மக்களால் வீட்டுக்கு அனுப்படுகின்றபோது, இவர்களது பொய்யான வதந்திகளும், விமர்சனங்களும் முடிவுக்கு கொண்டுவரப்படும். இறுதியில் இவர்களது பாதுகாவலர்கள் உற்பட அனைவரும் அரசியல் தஞ்சம் அடையும் இடம் முஸ்லிம் காங்கிரசாகத்தான் இருக்கும்.
முகம்மத் இக்பால்,
சாய்ந்தமருது.