ஏ.ஜி.றிஸ்வான்-
கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கான கிறிக்கெட் சுற்றுப்போட்டி இன்று (12) கல்முனை உவெஸ்லி பாடசாலையில் இடம்பெற்றது. இதன் போது மட்டக்களப்பு மத்தி, மட்டக்களப்பு, கல்முனை ,அக்கரைப்பற்று வலய ஆசிரியர் கழகங்கள் பங்குபற்றியதில் இறுதிச்சுற்றுக்கு தெரிவான அக்கரைப்பற்று வலய ஆசிரியர்கள் அணி சம்பியன் பெற்று அகில இலங்கை ரீதியிலான போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அக்கரைப்பற்று வலய ஆசிரியர் அணி தொடர்ந்தேர்ச்சியாக தேசியமட்டங்களில் வெற்றிவாகை சூடியதுடன் பல தங்கப்பத்தக்கங்களை முன்பு பெற்றதும் குறிப்பிடத்தக்கது.