ஸபீக் ஸூசைன்-
மன்னார் மற்றும் முசலி பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உரியதீர்வுகளை காண்பது தொடர்பான முக்கிய கலந்துரையாடலொன்று இன்று (16) பிற்பகல் 10.00 மணிக்கு கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, அமைச்சர்ரவூப் ஹக்கீம், பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், மாகாண சபை உறுப்பினர் ரயீஸ்மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாருக் ஆகியோருக்குமிடையில்கடற்றொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அப்பிரதேச மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் அங்குவிளக்கமளித்தார். ஆண்டாண்டு காலமாக முசலி பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும்பிரச்சினைகள் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து மீன் பிடிக்க வருபவர்களின்பிரச்சினைகள் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாருக்அவர்களும் விளக்கமளித்தார்.
இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட மீனி பிடி உதவிப் பணிப்பாளர், அமைச்சின் செயலாளர்கள், முசலி பிரதேச மீனவ சங்கங்கள் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும்கலந்துகொண்டனர்.