வெளி மாகாணங்களுக்கு நியமனம் பெற்ற கிழக்கு மாகாண தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகளை கிழக்கு மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட கிழக்கு முதலமைச்சர் அல் ஹாபில் நசீர் அஹமட்டின் பணிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் கிழக்கு முதலமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் கடிதமொன்றை அட்டாளைச்சேனையைச்சேர்ந்த ஓய்வுநிலை வங்கியாளர் தொழிலதிபர் அல்ஹாஜ் ஏ.சீ.எம்.சமீர் முதலமைச்சர் நசீர் அஹமட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :-
கிழக்கு மாகாண, தேசிய கல்வியியல் கல்லூரி டிப்ளோமாதாரிகள்: சுமார் 310 பேர் வெளிமாகாணப் பாடசாலைகளுக்கு கல்வியமைச்சினால் நியமிக்கப்பட்டனர். இவர்களில் கடமையை ஏற்றுக்கொள்ளாத சுமார் 178 பேருக்கு கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு நியமனக்கடிதம் வழங்கப்பட்டுள்ளது. இப்பணி வரலாற்று முக்கியத்துவமாகும்.
கிழக்கு முதலவர் என்ற வகையில் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த ஆசிரியர்கள் வேறு மாகாணக்களுக்குச் செல்லக்கூடாது.
எவ்வகையிலும் கஷ்டங்கள், துன்ப துயரங்களை அவர்கள் எதிர் கொள்ளக்க்டாது என்பதில் தாங்கள் உறுதியாக இருந்ததுடன் ஆரம்பம் முதல் இறுதி வரை பல்வேறு சிரமங்களை எதிர் கொண்ட தங்களின் பணி பாராட்டுக்குரியதாகும். இது நீண்டகாலம் பேசப்படும் என்பதில் சந்தேகம் இல்லை .
வெளி மாகாணங்களில் நியமனம் பெற்ற ஆசிரியர்கள் தற்போது கிழக்கு மாகாணத்தில் நியமனம் பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தங்களின் மாவட்ட பாடசாலைகளிலேயே நியமனம் பெற்றுள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
இதற்காகத் தன்னை அர்பணித்த கிழக்கு முதலமைச்சர், உறுதுணையாக அமைந்த கிழக்கு கல்வியமைச்சர், ஆகியோரின் பணி பாராட்டுக்குரியதாகும்.
வெளி மாகாங்களுக்கு நியமனம் பெற்று தற்போது கிழக்கு மாகாணத்தில் மீள் நியமனம் பெற்றுள்ள ஆசிரியர்கள் தங்களது பணி மறந்து தொழிற்படாது நன்றியுடன் பணியாற்ற வென்டும்.
தற்காலத்தில் தூரப்பிரதேசமொன்றில் பணியாற்றுவதில் எதிர்கொள்ளப்படும் சிரமங்கள் தெரிந்ததே. ஆனால் குறித்த ஆசிரியர்களுக்கு தற்போது அக்கஷ்டங்கள் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
அதனை அவர்கள் மறந்துவிடாது பணியாற்ற வேண்டும், மாணவர் கல்விக்காக தங்களை அர்பணிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.