யாழ் கொடிகாமத்தில் விபத்து - ஒருவர் வைத்தியசாலையில்

பாறுக் ஷிஹான்-
கொடிகாமம் வைத்தியசாலைக்கு அருகில் நேற்று(11) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கொடிகாமத்திலிருந்து மிருசுவிலை நோக்கி சைக்கிளில் சென்றுகொண்டிருந்த முதியவரை பின்பக்கமாக வந்துகொண்டிருந்த படிரக வாகனம் முந்திச் செல்ல முற்பட்டபோது மோதியுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இவ்விபத்து சம்பவத்தில் கொடிகாமம் ஐயன் கோயிலடியைச் சேர்ந்த இரத்தினம் என்பவரே காயமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -