முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கூட்டமைப்பை உருவாக்க கிழக்கு முஸ்லிம் பேரவை முயற்சி..!

அஸ்லம் எஸ்.மௌலானா-
முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஒரணியில் திரட்டி, முஸ்லிம் கூட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு கிழக்கு முஸ்லிம் பேரவை தீர்மானித்துள்ளது.

கிழக்கு முஸ்லிம் பேரவையின் நிறைவேற்றுக் குழு கூட்டம் அதன் கல்முனை அலுவலகத்தில் நடைபெற்றபோது, இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஷிபான் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கருத்தொருமிப்புக்கு வர வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் றவுப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர்- அமைச்சர் றிஷாட் பதியுதீன் ,தேசிய காங்கிரஸ் தலைவர்- முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ், முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர்- முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத், முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம்- முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹசன் அலி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிழக்கு மாகாண பொறுப்பாளர்- இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடுவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடுத்த கட்டமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவது என இக்கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டது 

மேலும் இது குறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய சூறா சபை என்பனவும் முஸ்லிம் அரசியல் தலைமைகளிடம் வலியுறுத்த வேண்டும் என அவற்றிடம் கோரிக்கை விடுப்பது எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கிழக்கு முஸ்லிம் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முஹம்மது ஷிபான் மேலும் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -