இராணுவப் புரட்சி தொடர்பில் கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்த கருத்து இராணுவத்தை எந்த வகையிலும் அகௌரவப்படுத்துவதன்று என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்தார்.
கேகாலையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
நாட்டில் இன்று பொலிஸ் ஆட்சியுள்ளது. இதுபோன்ற நிருவாகம் உள்ள உலக நாடுகள் எல்லாவற்றிலும் இராணுவ ஆட்சியொன்று நடைபெற்றுள்ளது. இது இலங்கையிலும் ஏற்படலாம் என்றே அவர் கூறியுள்ளார் எனவும் மஹிந்த ராஜபக்ஷ மேலும் கூறினார்.
டெ.சி