அதிபர்களுள் பசீர் அதிபர் முன்னுதாரணம் - ஹரீஸ்

அகமட் எஸ். முகைடீன், ஹாசிப் யாஸீன்-
ரசியல் தலைமைகளுடன் சிறந்த உறவைப் பேணி கல்லூரியின் தேவைகளை பூர்த்தி செய்யும்ஆளுமை கொண்டவர் அதிபர் பசீர் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் புகழாரம் தெரிவித்தார்.

கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரியின் அதிபராக கடந்த 26 ஆண்டுகளாக கடமையாற்றிய ஏ.எச்.ஏ.பசீர் அவர்களின் சேவையைபாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு திங்கட்கிழமை (14) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி அதிபர் திருமதி லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அஅதிதியாக ஶ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸ் தேசியத் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம், கெளரவ அதிதியாகவிளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹமீட், மற்றும் கிழக்குமாகாண சபை உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவிகள, ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் ஹரீஸ் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு அவர் உரையாற்றுகையில்,

சமூகத் தேவைக்காக சமூகத் தலைவர்கள் அர்பணிப்புடன் புரட்சிகரமாக செயற்படுகின்ற வரலாற்றுப்பின்னணியில் உருவான கல்லூரியாக கல்முனை மஃமூத் மகளிர் கல்லூரி திகழ்கிறது. பெண் கல்வியின்முக்கியத்துவத்தை உணர்ந்த இப்பிரதேச அரசியல் தலைமைகள் அன்றுமுதல் இன்றுவரைஇக்கல்லூரியின் வளர்ச்சிக்காகவும் உயர்ச்சிக்காகவும் தம்மாலான பங்களிப்புக்களைஆற்றிவருகின்றனர். 

சவால்களுக்கு மத்தியில் இப்பாடசாலையின் அதிபர் பதவியினை முதன் முதலாக பொறுப்பேற்றஎம்.சி.ஏ.ஹமீட்டின் அர்பணிப்புடனான சேவையின் பலனாய் பெரும் வரலாற்று சாதனைகளை படைத்தகல்லூரியாக இக்கல்லூரி திகழ்கின்றது. இதன் பின்னர் ஏ.எச்.ஏ.பசீர் இப்பாடசாலையின் அதிபராகபெறுப்பேற்று பாடசாலை அபிவிருத்திக்கு பெரும் பங்காற்றினார். இவரது காலத்தில் பல்கலைக்கழகபிரவேசத்தில் புதிய சாதனைகள் உருவாக்கப்பட்டதோடு இப்பாடசாலையின் புகழ் உச்சத்தை தொட்டது.இதன் விளைவாய் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் மாணவர்கள் கல்வி கற்பதற்காய் இப்பாடசாலைநோக்கி வருகைதந்து கொண்டிருக்கின்றனர். 

அதிபர் பசீர் 24 மணி நேரமும் பாடசாலையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்துசெயலாற்றினார். இவர் தனது குடும்பத்தினருடன் செலவிடும் நேரங்களை தியாகம் செய்து கடமைநேரவரையறையின்றி காலை முதல் மாலைவரை இக்கல்லூரிக்காக சேவையாற்றினார். அரசியல்தலைமைகளுடன் சிறந்த உறவைப் பேணி கல்லூரியின் தேவைகளை அரசியல்வாதிகளின் உதவியுடன்பூர்த்தி செய்கின்ற ஆளுமை கொண்டவராக காணப்பட்டார். அந்த வகையில் மறைந்த தலைவர் அஸ்ரப்அவர்களும் இக்கல்லூரியின் அபிவிருத்திற்காக பெரும் பங்காற்றினார் என்பதை இச்சந்தர்ப்பத்தில்நினைவு கூற கடமைப்பட்டுள்ளோம்.

பாடசாலைச் சமூகத்தினதும் பெற்றோர்களினதும் நன்மதிப்பை பெற்றவராக இருந்து அன்பாகவும்,பண்பாகவும், பணிவாகவும் சேவையாற்றினார் பசீர். அவரின் சிறந்த குணங்களும் பரந்த மனதும்கடமையினை இலகுவாகவும் சிறப்பாகவும் மேற்கொள்வதற்கு துணையாக அமைந்தது. 

மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து ஒழுக்க விழுமியங்களை கற்பித்து சிறந்த பெண்தலைமைத்துவங்களை உருவாக்கிய பெருமை இவரைச்சாரும். இவ்வாறு இப்பாடசாலையின்அபிவிருத்தியிலும் இப்பிராந்தியத்தின் கல்வி வளர்ச்சியிலும் தன் நாமத்தை முத்திரை பதித்துச்சென்றுள்ளார். இதன்விளைவாய் ஓய்வின் பின்னரும் அவரின் சேவையினை நாடி இக்கல்லூரிஏங்குவதை உணரமுடிகிறது. 

தேசிய ரீதியாக புகழ் பெற்ற இக்கல்லூரியின் தரத்தை பேணிப் பாதுகாத்து முன்னேற்றப் பாதைக்குஇட்டுச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உரித்தான கடமையாகும். மாணவர்களின்எதிர்காலம் பாடசாலையில் தங்கியிருக்கின்றமையினால் அனைவரும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிமாணவர்களின் சிறந்த எதிர்காலத்திற்கு வித்திட வேண்டும். 

மாணவர்களின் கல்வி விடயத்தில் அரசியல்வாதிகளாகிய நாங்கள் மிகுந்த கருசணையுடன்செயற்படுகின்றோம். அத்தோடு இப்பிராந்தியத்தின் கல்வி அபிவிருத்திக்காக எதனைச் செய்வதற்கும்தயாராக இருக்கின்றோம். அந்தவகையில் இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாக கல்வி அமைச்சர்அகிலவிராஜ் காரியவசமிடம் வேண்டிக் கொண்டமைக்கு அமைவாக இப்பாடசாலையின் பௌதீக வளப்பற்றாக்குறையினை அடுத்துவரும் ஆண்டில் பூரணப்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளார். 

அது மாத்திரமன்றி பிரதமர் மற்றும் கல்வி அமைச்சர் ஆகியோருடன் கல்முனைப் பிராந்தியத்தின் கல்விவளர்ச்சி தொடர்பாக தலைவர் றவூப் ஹக்கீம் தலைமையில் கலந்துரையாடி அதற்கான வழிமுறைகளைகண்டறிந்துள்ளோம். எனவே எமது செயற்பாடுகள் வீண் போகாத வகையில் பாடசாலைச்சமூகத்தினரும் அதிபர் பசீர் அவர்களை முன்மாதிரியாக கொண்டு செயற்பட்டு இப்பிராந்தியத்தின் கல்விவளர்ச்சிக்கு பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -