எஸ்.எம்.சன்சீர்-
நிஜமாகவே விபத்து நடந்தது போன்ற உணர்வு! மக்கள் ஒருகணம் அதிர்ச்சி! நடந்தது என்ன?
கல்முனை வடக்கு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் அனர்த்த முகாமைத்துவ ஒத்திகை கடந்த(08) மதியம் கல்முனை பாண்டிருப்பு பிரதான வீதியின் தாளவட்டுவான் சந்திக்கு அருகாமையில் இடம்பெற்றது.
இதில் 30 பயணிகளை ஏற்றி வந்த பேருந்தும், கனரகவாகனமும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளான சம்பவம்போல் ஒத்திகை காண்பிக்கப்பட்டுள்ளது.
வீதியால் சென்ற பலர் பாரிய விபத்துச்சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கும் அளவிற்கு அக்காட்சி பாவனை செய்யப்பட்டு இருந்தமை விஷேட அம்சமாகும்.
இந்த நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் முரளீஸ்வரன் மற்றும் வைத்தியசாலையில் கடமையாற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிமார், உத்தியோகத்தர்கள் உள்ளடங்கலாக பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.