எம்.எம்.ஜபீர்-
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் மன்றத்தின் சர்வதேச இளைஞர் தொடர்பு பிரிவு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள சர்வதேச இளைஞர் பரிமாற்ற நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு இலங்கையிலுந்து 16 இளைஞர்கள் கலந்து கொள்ளுகின்றனர்.
இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சாய்ந்தமருதைச் சேர்ந்த ஸமான் மொஹமட் ஸாஜித் தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 16ம் திகதி பங்களாதேஷ் பயணமாகவுள்ளார். பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் 16ம் திகதி முதல் 24ம் வரை நிகழ்வு இடம்பெறும். உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இளைஞர்கள் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. இவர் சாய்ந்தமருது ஜீனியஸ் 7 இளைஞர் கழகத்தின் தலைவரும் சர்வதேச பொது நலவாய இளைஞர்
மன்றத்தின் உறுப்பினரும் ஐக்கிய நாடுகள் இளைஞர் தன் ஆர்வாளர்கள் அமைப்பின் பிரதிநிதியுமாவார்.
இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச இளைஞர் மாநாடு மற்றும் பலவேறு நிகழ்வில் பங்கேற்றவர்.வியாபார முகாமைத்துவ பட்டதாரியுமான இவர் கல்முனை ஸாஹிரா கல்லூரியின் பழைய மாணவரும் ஆவார். இவர் ஸமான் பைரோஸ் இன் புதல்வரும் ஆவர்.