ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேசபை கோறளைப்பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட புணாணை மேற்கு கிராம சேவகர் பிரிவில் அடங்கும் புணாணை அணைக்கட்டு, பொத்தானை கிராம மீள்குடியேற்ற மக்கள் கடந்த 1960 தொடக்கம் குறித்த கிராமத்தில் நிரந்தர குடியிருப்பாளர்களாக வாழ்ந்து வந்தனர்.
1985 மற்றும் 1990ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பயங்கரவாத பிரச்சனைகள் காரணமாக அக்கிராமத்தில் வாழ்ந்த 111 முஸ்லிம் குடும்பங்களில் எட்டு பேர் கொலை செய்யப்பட்டதினால் முற்று முழுதாக அக்கிராம மக்கள் ஓட்டமாவடி பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்தனர்.
2002ம் ஆண்டு போர் நிறுத்த உடன்படிக்கையினை தொடர்ந்து மக்கள் அக்கிராமத்திற்கு மீள் குடியேறுவதற்காக சென்றனர். அப்பொழுது இலங்கை இராணுவத்தினரும் துணைப்படைகளும் அப்பிரதேசங்களில் முகாம்மிட்ருந்தனர். அதனால் மக்கள் மீளக்குடியேற முடியவில்லை. 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர் அப்பிரதேசங்களுக்கு சென்று தாங்கள் வசித்த இடங்களை சுத்தப்படுத்தி குடியேற முற்பட்ட பொழுது வன இலாகா அதிகாரிகள் கிராம சேவை உத்தியோகத்தர், பிரதேச செயலாளர் ஆகியோர்களால் தடைகள் ஏற்படுத்தப்பட்டன. மக்கள் தாங்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகளை பல்வேறு அரசியல் தலைமைகளின் கவனத்திற்கு முன்கொண்டு சென்றும் அதற்காக தீர்வுகளை பெறாத நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முன்னாள் அமைச்சர் பசீர் சேகுதாவூத்தின் தலைமையில் அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள் வன இலாக அதிகாரிகள் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மகாவலி அதிகார சபை அதிகாரிகள் உட்பட காணி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர், விவசாய அமைப்புக்கள், பள்ளிவாயல் இடம் பெயர்ந்த மக்கள் சகிதம் மாவட்ட செயலகத்தில் பல தடவைகள் ஒன்று கூடி அம்மக்கள் மீளக்குடியேறுவதற்காக அங்கீகாரம் வழங்கப்பட்டது.
இருந்தும் தொடந்து கிரான் பிரதேச செயலக அதிகாரிகள், வன இலகா அதிகாரிகள் தொடர்ந் தேர்ச்சியாக அம்மக்கள் தங்களுடைய இடங்களை துப்பரவு செய்து மீளக்குடியேறுவதற்கு தடைகள் ஏற்படுத்திவருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அப்பிரதேசத்தில் மக்கள் மீளக்குடியேறி அமைத்துள்ள குடிசைகளையும், வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தி வன இலாகாவிற்கு சொந்தமான காணிகள் எனக்கூறி பலாத்காரமாக மக்களை வெளியேற்றுவதாகவும் மேலும் அப்பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த காணியானது வன இலாகா பிரதேசத்திற்கு வர்த்தமானியில் அறிவிக்கப்படாத பகுதியாகும். இருந்தும் வன இலாகாவிற்கு சொந்தமான எல்லைகளில் மக்கள் குடியேறுவதாக மக்களினுடைய குடிசைகள் பலாத்காரமாக சேதப்படுத்தி முற்றாக அழிக்கப்படுவதாக மக்கள் தங்களினுடைய ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இது சம்பந்தமாக அங்கு மீளக்குடியேறுவதற்காக மீள் குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பிரதி அமைச்சர் அமீர் அலி, முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாரூக் ஆகியோர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் இன்னும் அதற்காக தீர்வுகள் கிடைக்கவில்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த பிரதேசத்தில் அரசதினைகளங்களில் பதிவு செய்யப்பட்டு இயங்கிவருக்கின்ற அரச நிறுவனங்கள்
01-மொகைதீன் ஜும்மா பள்ளிவாயல் - பதிவிலக்கம் B/1470/R/T/197
02- ஆமீலா நன்னீர் மீன்பிடி கூட்டறவு சங்கம் - பதிவிலக்கம் MADA/562
03- கிராம அபிவிருத்தி சங்கம் - பதிவிலக்கம் BT/KP,210/5,21/11/1977.
காணிக்களுக்குறிய ஆவணம் தொடர்பான பதிவிலக்கங்கள்..
TP-289764 ஒரு ஏக்கர், TP-289763 ஏழு ஏக்கர்,TP-275776 ஐந்து ஏக்கர்,TP-248750, TP-318342 இரண்டு ஏக்கர், மூன்று ஏக்கர், TP-171346 ஆறு ஏக்கர், மாவட்ட காணி தினைகளத்தில் பதி செய்யப்பட்ட ஆவணங்கள் இருந்தும் மேலே குறிப்பிடப்பட்ட அரச அதிகாரிகள் மக்களை குடியேறுவதற்கு அனுமதி வழங்க மறுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே குறித்த விடயத்தில் மேற்குறிப்பிட்ட அரசியல் தலைமைகளும், அரசாங்க அதிபரும் கவனத்தில் எடுத்து தீர்வுகளை பெற்றுதருமாறு பாதிக்கப்பட்ட மக்கள் வேண்டி நிற்கின்றனர்.