திருகோணமலை பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள கடைகளை பொது சுகாதார பரிசோதகர்கள் பரிசோதனைக்கு உற்படுத்திய போது அங்கு சென்ற ஊடகவியளாரை தாக்க முற்பட்டதாகவும் தன்னை அச்சுறுத்தியதாகவும் இன்று (16) திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை.நீதிமன்ற வீதியில் வசித்து வரும் ஏ.எம்.கீத் என்பவரே முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது-கிழக்கு மாகாண பிராந்திய சுகாதார பிரதிப்பணிப்பாளர் ஏ.லதாஹரன் தலைமையில் சென்ற பொது சுகாதார பரிசோதகர்கள் ஹோட்டல்களை சோதனை செய்தனர்.
சோதனை செய்யும் போது அங்கு சென்று செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட போதே ஹோட்டலில் வேலை செய்த ஊழியர்கள் தாக்குதல் நடாத்த முற்பட்டதாகவும் இதேநேரம் நேற்றிரவு ஊடகவியலாளரின் வீட்டின் கதவை இனந்தெரியாத சிலர் தாக்கியதாகவும் பக்கத்து வீட்டார் வெளிச்சத்தை போட்டவுடன் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளரை தாக்க முற்பட்ட சம்பவம் தொடர்பாக தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.