பற்றி எரியும் ரோம் நகராய் முஸ்லீம் சமுகமும் பிடில் வாசித்த நீரோ மன்னர்களாக தலைவர்களும்.

அஸ்மி ஏ கபூர் -

முஸ்லிம் சமுகம் மிகவும் எதார்த்தமான பலிவாங்களுக்குட்பட்டிருக்கும் இந்த காலப்பகுதியில் நம்முடைய சமுகத்தலைமைகளின் அரசியல் நிலைப்பாட்டையும் மன நிலையையும் ஒரு முறை மீட்டுப்பார்ப்பது மிகப் பொருத்தம் என நம்புகிறேன்.

கடந்த ஆட்சியில் முஸ்லிம்கள் மீதான அடக்கு முறைகளை முன் வைத்து பெருவாரியான முஸ்லிமகளின் பேராதரவுடன் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கு அமர்த்தப்பட்டது.

அதனை பயன்படுத்திய தலைவர்கள் தங்களால் முன் மொழிவுக்குட்பட்ட ஆட்சியாக பிரகடனப்படுத்தி அவர்களுக்குரிய சலுகைகளை பெற்றுக்கொண்டனர்

இன்று பாராளுமன்றத்தில் நடப்பது என்ன?

பாராளுமன்றம் புதிய அரசியலைப்பை உருவாக்குவதற்க்குரிய யோசனைகனைகளை முன் மொழிவதற்க்கான அரசியலைமைப்பு சபையாக மாற்றம் பெற்றிருக்கிறது.

இதனை மிகச் சிறந்த சந்தர்ப்பமாக பயன்படுத்துகிற நோக்கில் தமிழ் தரப்பு , சிங்கள பெரும்பான்மை சமுகம் தொடர்பான கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன

இது இலங்கையின் புதிய மூன்றாவது அரசியலமைப்பாகும் ,
வழமை போல திருத்தம் மேற்கொள்ளப்படுகின்ற விடயமல்ல .

இவற்றின் தீவிரம் உணராமல் எமது தலைமைகள் ஒருவரை பற்றி ஒருவர் குறை கூறி மக்களிடையே தங்களின் சுயநல கட்சி அரசியலை முன்னெடுப்பதையே
காண்கிறோம்.

இன்று நாம் சந்திக்கின்ற இன ரீதியான அடக்கு முறைக்களுக்கு எதிராக யாருமே முன்வராத நிலையில் நமது பதவிகளையும் இடங்களையும் தக்க வைத்து கொள்வதற்க்கான பிரயத்தனங்களை மேற் கொள்வதையே காண்கிறோம்.

கிழக்கு மாகாணத்தில் இறக்கமாம் எனும் ஊரில் அண்மையில் புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.

அம்பாறை மாவட்டத்தில் மூன்று மாவட்ட ஒருங்கிணைப்பு தலைவர்கள் இருக்க தக்கதாக இருவரின் அனுமதி பெறப்பட்டிருக்கிறது


மன்சூர் என்கின்ற பா,உ அனுமதி அளித்ததாக அரசாங்க அதிபர் கூறுகிறார்.

இது தொடர்பில் குறித்த கட்சியின் தலைவராக இருக்கின்ற அமைச்சர் ஹக்கீம் அந்த மாவட்ட பா.உ அழைத்து ஒருமுறை யேனும் பேசி இருப்பாரா? இந்த பிரச்சினை தொடர்பில் இந்த சமுகப் பிரதிநிதிகளை அழைத்து இவற்றுக்கான தீர்வு நோக்கிய நகர்வுகள் கூட தலைவர் ஹக்கீமால் செய்ய முடியவில்லை.

ஆனால் புத்தளம் சென்று " ரிசாட்டை விரட்ட பாயிஸ் " என மேடையில் சவால் விட முடிகின்றமை தனது கையாலாகாத்தனம் என்பதை சாணக்கிய தலைமை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இன்று அம்பாரை மாவட்ட முஸ்லிம் கள் உணருகின்ற வெற்றிடம் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாஹ் வின் வெற்றிடமாகும்.

அதற்க்கு பிரதான காரணமாக அ.இ.ம.க அம்பாரை மாவட்ட உதிரி அரசியல்வாதிகளையும் இணைத்துக் கொண்டு வழமையாக மாற்றுக்கருத்தாடலுக்கு கிடைக்கின்ற சுமார் 60000 அம்பாரை மாவட்ட மக்களின் வாக்குகளில் 33000 பெற்றுக் கொண்டனர்.

ஆனால் அவர்களால் பா. உ பெற்றுக் கொள்ளவில்லை அதனால் இன்று அம்பாரை தனக்கு தலைமை கொடுத்த பா.உ இழந்தது
உதிரிகள் தங்களது பதவிகளை பெற்று தமது சுயநல தேவைகளை நிறைவு செய்தனர்.

இன்று சமுகம் தொடர்பில் பேசுவதற்கு தயா கமகே என்கின்ற அமைச்சரை எதிர்த்து துணிந்து பேசுகின்ற சிரேஷ்ட அரசியல் தலைமையை அம்பாரை மக்கள் இழந்து இருக்க மாட்டார்கள்

எல்லா சமுகங்களுடைய அரசியல் ரீதியான தேவைகள் நிறைவு பெற்றுவருகின்ற சூழலில் ஏன் எம் சமுகம் இன்னும் மாறாத பிச்சைக்காரனின் தேவைப்படுகின்ற
புண் போன்று பிரச்சினைகளை வைத்திருக்கிறார்கள்.

குறுகிய கால இடை வெளியில் கட்சி வளர்த்த ரிசாட்டால் ஏன் இது வரை வட புல மக்களை மீள் குடியேற்ற முடியவில்லை.

தான் சொப்பின் பேக்குடன் வந்தவராக இருந்தால் அந்த மக்களின் தேவைகளை முடிப்பபதற்க்கு முன் அம்பாரையில் முகாமிட வந்த காரணம் என்ன?

அடிக்க படுகின்ற வேகம்தான் பந்தின் மீள்வருகை என்பதை அணைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

எம்மை நாமே ஒவ்வொரு அரசியல் நகர்விலும் வியாபாரிகளாக காட்டி எம் மர்களின் அரசியல் அடையாளங்களை புதை தோண்டிபுதைத்தும் விடுகிறோம்.

நீங்கள் இந்த நல்லாட்சி யில் எதை பெற்று தரப் போகிறீர்கள் ??
எந்த பிரச்சினையை புதிதாக உருவாக்கப்போகிறீர்கள் ???

மக்கள் அவைகளில் மெளனிகளாக இருந்து கொண்டு ரோசமற்ற மக்கள் பிரதிநிதிகளான உங்களால் முகநூலிலும் மைதானங்களிலும் பொது மேடைகளிலும் பேசுகின்ற வீறாப்புக்குக்கு குறைவில்லை.

முஸ்லிம்கள் நூறு சதவீதம் வாக்களித்த ஹரீஸ் , பைசல் , மன்சூர் பா உ களினால் எமது சமுகத்திற்காக குரல் கொடுப்பதில் சிக்கல் நிலை தோன்றுவதாக அவர்கள் கருதுவதாக இருந்தால் ,

சிங்கள மக்களின் வாக்குகளையும் நம்பி இருக்கின்ற ஹக்கீம் ஹலீம் கபீர் ஹாசீம் பா உ கள் பேசுவார்கள் என அம்பாரை முஸ்லிம்கள் நம்பிட முடியாது .

ஒவ்வொரும் தமது தனிப்பட்ட அஜன்டாவில் தமது பதவியை பாதுகாப்பதில் இயங்குகிறீர்கள்
அது எங்கள் சமுகத்தை பாதிக்கின்ற அளவை நீங்கள் உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.

முதுகெழும்பிலாத தலைவர்கள் தங்களின் கட்சிகளின் குரங்கு சேஷ்டைகளை பார்க்கிறீர்களே ஒழிய சமுகத்தை பார்ப்பாதாக எந்த நகர்வுகளிலும் உணர முடியவில்லை

ஒரு கட்சித் தலைவரின் தவறை இன்னொரு , கட்சித் தலைவரின் தவறால் நீங்கள் இருவரும் சமப்படுத்துகிறீர்கள்.

முடிவு கிடைக்கும் .

கிழக்குவானம் மெல்ல சிவந்து தனது ஒளிக்கீற்றை விசாலக்கின்ற போது
சுதந்திர கிழக்கு தனது விடுதலை கொடியை ஏற்றும்.

அந்த பொழுது ஏங்கங்களுடன் விடியும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -