அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை-ரங்கிரிவுல்பொத்த சந்தியில் மோட்டார் சைக்கிளுடன் இரானுவத்திற்கு சொந்தமான வாகனம் இன்று (19) பிற்பகல் 12.30 மணியளவில் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞனொருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை-துலசிபுரம் இலக்கம் 16 இல் வசித்து வரும் டபிள்யூ.சஜித் மதுசங்க எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவருடன் இரானுவ வாகனம் மோதியதினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
விபத்துக்குள்ளானவரை கோமரங்கடவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை கொண்டு சென்று சிகிச்சையளிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்ட்டுள்ளது. விபத்து தொடர்பாக கோமரங்கடவெல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.