கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு..!

கிழக்கு மாகாணத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இடம்பெற்றது

திருகோணமலையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வருமான பரிசோதகர்கள் மற்றும் ஆய்வு உத்தியோகத்தர்களுக்கான நியமனங்கள் இன்று காலை 10.30 மணியளவில் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ஏ.எல்,எம் நசீர்,விவசாய அமைச்சர் கே.துரைராஜசிங்கம் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலப்பத்தி அவர்களுடன் முதலமைச்சின் செயலாளர் யூ.எல் அஸீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையின் கீழுள்ள அனைத்து வெற்றிடங்களையும் எதிர்வரும் 4 மாதத்திற்குள் நிரப்புவதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் குறிப்பிட்டார்.

கடந்த ஆட்சியாளர்கள் நிர்வாகத்தில் முறையாக கவனம் செலுத்தாமையினாலேயே இத்தனை வெற்றிடங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவற்றை தமக்கு சுமக்க வேண்டியேற்பட்ட போதிலும் மக்களுக்காக எவ்வாறான நடவடிக்கைகளையும் எடுக்கத் தயாரென முதலமைசச்ர் இங்கு சுட்டிக்காட்டினார்

அது மாத்திரமன்றி கடந்த காலங்களில் அரச நியமனங்களுக்காக பரீட்சைகளை நடாத்திவிட்டு வருடக்கணக்கில் அவர்களை காத்திருக்க வைக்கும் அரசியல் கலாசாரத்தை ஒழித்து பரீட்சைகள் முடிந்ததும் விரைவில் தொழில்களில் அவர்களை உள்ளீர்க்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் கூறினார்

நியமனங்களுக்காக விண்ணப்பிக்கக் கோருகின்ற போது தமக்கு விருப்பமான தொழிலுக்கு மாத்திரமே விண்ணப்பிக்க வேண்டுமெனவும் சிலர் எவ்வித தேவையுமின்றி விண்ணப்பிப்பதன் ஊடாகவே பரீட்சைகளை நடத்த வேண்டியுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் சுட்டிக்காட்டினார்

தமது ஆட்சிக்காலப் பகுதிக்குள் கிழக்கில் உள்ள சகல திணைக்களங்களுக்கும் தேவையான ஆளணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்.

அத்துடன் தற்போது உள்ளூராட்சி மன்றங்களுடாக முன்னெடுக்கப்படும் சகல நடவடிக்கைகளும் முதலமைச்சர்களின் கண்காணிப்பின் கீழேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதால் அது தொடர்பான சகல நடவடிக்கைகளையும் உரிய வகையில் முன்னெடுக்கவுள்ளதாகவும் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் இங்கு சுட்டிக்காட்டினார்.

அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களூடாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் நிதியொதுக்கீடுகளும் முதலமைச்சரின் முழு அனுமதியுடனேயே முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான விடயமாகும்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -