அமர்வின்போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், குழுத் தலைவருமான, ஆர்.எம். அன்வரினால் அண்மையில் கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பாக கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சால் கிழக்கு மாகாண பாடசாலைக்கு நியமிக்கப்பட்டது தொடர்பாக தனக்கு திருப்தி இல்லை என்பதுடன் முறையற்ற இடமாற்றம் திருகோணமலை மாவட்டத்திலிருந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு இடம்மாற்றம் பெறுவது தொடர்பாக திருகோணமலை மாவட்ட மாணவர்களின் கல்வியினை கல்வி அமைச்சர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும் அது மட்டுமன்றி வழங்கப்பட்ட நியமனம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது பற்றி மாவட்டம், வலையம் மற்றும் இன விகிதாசாரம் என்பன அமைச்சரால் தெரிவிக்கப்பட வேண்டும்.
குறித்த கல்வியற்கல்லூரி ஆசிரியர்களின் பாடசாலை நியமனங்களின் போது மாகாண சபை உறுப்பினர்களின் ஆலோசனைகள் பெறப்படவில்லை என்பதுடன் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர், மாகாண சபை உறுப்பினர்களை கூட்டி இன்றுவரை ஒரு ஆலோசனை கூட்டமேனும் கூட்டாமைக்கு காரணம் என்ன அமைச்சர் தனியாக இயங்குவது தொடர்பில் நாம் எதிர்வரும் கிழக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன் மொழிவின் போது மட்டும் நாம் தேவை உடையவர்களாக ஆகிவிட முடியாது.
அமைச்சர் இவ்வாறு செய்வதால் வரவு செலவு திட்டத்தில் வாக்களிப்பதா என்பது தொடர்பில் அணைத்து மாகாண சபை உறுப்பினர்களும் சிந்திக்க வேண்டி வரும் எனவும் பல தடவைகள் கல்வி அமைச்சருக்கு குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டுமாறு கேட்டும் கேட்காததுபோல் இயங்குவது பொருத்தமற்றது எனவும் தெரிவித்தார்.
மேலும் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களில் சில பாடசாலைகள் முற்றாக உள்வாங்கப்படாத நிலையில் சில வெளி மாகாண பாடசாலைகளில் கடைமையை பொறுப்பேற்ற ஆசிரியர்களை நியமித்திருப்பது எந்த விதத்தில் நியாயமானது திருகோணமலை, கிண்ணியா, மூதூர் மற்றும் கந்தளாய் போன்ற கல்வி வலையங்களுக்கு போதுமான ஆசிரியர்கள் இல்லாத நிலையில் குறிப்பாக குச்சவெளி பிரதேச பாடசாலைகளுக்கு மிகவும் குறைவான ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவேதான் அமைச்சரிடம் ஏற்கனவே குச்சவெளி பிரதேசத்திற்கு ஒரு தனியான கல்வி வலயம் அமைக்க கோரி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் அவசர பிரேரணை முன் வைத்து பேசியது மாத்திரமன்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நசீர் அவர்களால் குச்சவெளிக்கான தனியான கல்வி வலயம் அமைக்கக்கோரி அமைச்சரவை பத்திரம் போட்டப்பட்டும் அவற்றை நடைமுறை படுத்த அமைச்சர் நடவடிக்கை எடுக்கவேண்டும் அவ்வாறு தனியான கல்வி வலயம் பெறுவதனூடாக குறித்த பிரதேசத்திற்கான கல்வி நடவடிக்கைகள் சிறந்த நிருவாகத்தினூடாக ஆசிரியர் பற்றாக்குறை நிவர்த்தி செய்து பிரதேச கல்வியினை முன்னேற்ற முடியும்.
மேலும் திருகோணமலை மாவட்டத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர்களை அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் இடமாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்கக்கூடாது அவ்வாறு வழங்குவதால் திருகோணமலை மாவட்ட மாணவர்களின் கல்வி சீரழிகின்ற செயல்பாட்டை செய்யக்கூடாது எனவும் அமைச்சர்களை கேட்டுக்கொண்டார்.
பின்னர் மாகாண சபை உறுப்பினர் மேதாந்த சில்வா அவர்களால் அம்பாறை சிங்கள பிரதேச பாடசாலைக்கான தனியான கல்வி வலயம் பிரித்து தரப்படவேண்டும் என பிரேரணை முன் வைத்து பேசியபோது அவரது பிரேரணையை ஆதரித்து பேசிய மாகாண சபை உறுப்பினர் அன்வர் குறித்த குச்சவெளி கல்வி வலயத்திற்கான நியாயங்களை மீண்டும் பிரேரணை முன் வைப்பின்போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சரால் குச்சவெளி கல்வி வலயம் தொடர்பாக பரிசீலனை மேற்கொண்டு அவற்றுக்கான நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.