அமைச்சர் ரஊப் ஹக்கீம் 2016 11 19 திகதி அன்று மூன்று நாள் உத்தியோக பூர்வ விஜயமாக கட்டார் சென்றுள்ளார். இந்நிலையில் அமைச்சர் ஹக்கீமின் கட்டார் சென்றிருப்பது பலத்த கேள்விகளை எழுப்பி உள்ளது..
இலங்கை நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கே சென்றுள்ள நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக இந்த கட்டார் விஜயம் அமைந்துள்ளதாக சில தகவல்கள் கசிந்துள்ளது.
இலங்கையில் உள்ள இனவாதத்தை இலங்கை முஸ்லிம் அரசியல் வாதிகளால் கட்டுப்படுத்த முடியாத அளவு தலை தூக்கியிருப்பதால் இனவாதத்தை கட்டுப்படுத்த சர்வதேசத்தின் அழுத்தத்தால் மாத்திரமே முடியும்.
அந்த வகையில்தான் அமைச்சர் ஹக்கீம் கட்டாரில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளை கொண்ட OIC (Organisation of Islamic Cooperation) என்ற அமைப்பினரை சந்திக்க கட்டார் சென்றுள்ளதாக அறிய முடிகின்றது..
OIC அமைப்பின் மூலம் இலங்கைக்கு அழுத்தம் கொடுத்து அரசை இனவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதே ஹக்கீமின் நோக்கமாகும்.. இதே போல 2014 ஆண்டு மஹிந்த ராஜபக்ஸ அரசுக்கு எதிராக OIC அமைப்பிடம் ஹக்கீம் முறைப்பாடு செய்தார்..
ஹக்கீமின் முறைப்பாட்டின் விளைவு மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச ரீதியில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை ஐ.நாவில் இழந்தது.. அதே போல இன்றைய ஜனாதிபதி மைத்திரிக்கும் பாரிய அழுத்தமொன்றை கொடுக்கவே அமைச்சர் ஹக்கீம் கட்டார் விரைந்துள்ளார்..
அமைச்சர் ஹக்கீம்..2016 11 21 திகதி OIC அமைப்பை கட்டாரில் வைத்து சந்திக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் ஹக்கீமின் இச்சந்திப்பு இலங்கையின் இனவாதத்தை சர்வதேச அழுத்தத்தின் ஊடாக நிச்சயம் கட்டுப்படுத்த முடியும் என்பதே உண்மை ..
நன்றி - விடியலைத்தேடி