தவ்ஹீத் ஜமாஅத்தின் ஆர்ப்பாட்டத்தில் பொதுவாக சிங்கள மக்களுக்கெதிராகவோ அல்லது பௌத்த சமயத்தலைவர்களுக்கெதிராகவோ மோசமான கருத்துக்கள் தெரிவிக்கப்படவில்லை. மாறாக ஞான சாரவுக்கெதிராகவே கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன. அதுவும் அவரது பாணியிலேயே கருத்துக்கள் முன் வைக்கப்பட்டமை இஸ்லாத்தின் அறிவுரைக்குட்பட்டதாகும். ஏனெனில் குர் ஆன் தெளிவாக சொல்கிறது நீங்கள் எவ்வாறு தாக்குதலுக்குட்படுத்தப்பட்டீர்களோ அவ்வாறே தாக்குங்கள் என. அந்த வகையில் பல்லா, தக்கடியா போன்ற வார்த்தைகளை ஊடகங்கள் வாயிலாக முதலில் பேசிக்காட்டியவர் ஞான சார.
அத்துடன் ஞானசாரவை சிங்கள மக்கள் சமயத்தலைவராக பார்த்த போதிலும் அவர் ஒரு அரசியல்வாதி என்பதை தெரிந்து வைத்துள்ளார்கள். அவருக்கெதிரான வார்த்தைகள் அவருக்கெதிரான வார்த்தைகளே தவிர ஏனையை பௌத்த சமய தலைவர்களுக்கெதிரானதல்ல என்பதை நிச்சயம் சிங்கள மக்கள் புரிந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந்த நாட்டை புலிகளிடமிருந்து மீட்டெடுத்த மஹிந்த ராஜபக்ஷ ஒரு சிங்களவர், பௌத்தர். அப்படியிருந்தும் அவர் ஆட்சியிலிருக்கும் அவரை நக்கித்திரிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட அவரை கள்வன், இனவாதி என்றெல்லாம் பகிரங்கமாக ஊடகங்களில் பேசுகின்றனர். இதனை சிங்கள மக்கள் பொறுமையாக கேட்கின்றனரே தவிர ஒரு முஸ்லிம் எப்படி சிங்கள தலைவருக்கெதிராக பேச முடியும் என போர்க்கொடி தூக்கினார்களா? அல்லது இன்று தவ்ஹீத் ஜமாஅத்தின் வார்த்தைகளை கண்டிக்கும் ஷேக் பழீல் போன்றோர் சிங்கள தலைவரான மஹிந்தவை முஸ்லிம்கள் தூஷிப்பது முஸ்லிம்களுக்கெதிராக சிங்கள மக்களை திருப்பும் என முஸ்லிம்களை எச்சரித்துள்ளார்களா? இல்லவே இல்லை.
ஆக மொத்தத்தில் வீரனுக்கு ஒரே நாளில் மரணம், கோளைக்கு வாழ்நாள் முழுதும் மரணம் என்பது போன்றுதான் தென்படுகிறது. அரசின் மோசமான இந்த முயற்சிகளுக்கெதிராக முஸ்லிம் அமைப்புக்களை மட்டுமாவது ஒன்று கூட்டி கண்டிக்க முடியாத அரசின் காக்காய் பிடிப்பாளர்கள் அரசுக்கெதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்திய, ஞானசாரவை சாடிய ஸ்ரீ . தவ்ஹீத் ஜமாஅத்தை மனந்திறந்து பாராட்டாமல் கண்டிப்பது கோழைகளின் செய்லாகும்.
எம்மை பொறுத்த வரை ஞானசாரவின் பின்னணியில் தேசத்துரோக வெளிநாட்டு சக்திகளும் சில முஸ்லிம் பச்சோந்திகளும் இருப்பதாக சந்தேகிக்கிறோம். இவர்கள் அவரை பிழையாக நடத்துகிறார்கள். இந்த நிலையில் முஸ்லிம் சமூகத்தின் உலமாக்களும் அரசியல் பிரமுகர்களும் ஞானசாரவுடன் நெருக்கத்தை ஏற்படுத்தி அவருக்கு அன்பால் உண்மைகளை உணர்த்த முன்வர வேண்டும். அது வரை தவ்ஹீத் ஜமாஅத்தின் பாணியும் இருக்கத்தான் வேண்டும்.
-மௌலவி முபாறக் அப்துல் மஜீத்