வடமாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும், ஆரம்பிக்கும் மற்றும் நிறைவடையும் நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று வடமாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, காலை 07:30 க்கு பாடசாலைகளை ஆரம்பிக்கப்பட்டு, பிற்பகல் 01:30 க்கு முடிவடையும் என அவ்வமைச்சு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளையும் சீராக ஒரே நேரத்தில் இயங்க செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கு கல்வியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.