எம்.எம்.ஜபீர்-
அவுஸ்திரேலியா-பிரித்தானியாவுக்கான வி.எப்.எஸ்.வீசா பெறும் நிலையம் 75-ஆர்னோல்ட் மாவத்தை கொழும்பு-10க்கு இடமாற்றப்பட்டுள்ளது.
இந் நிலையம் அண்மையில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ,இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மற்றும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம .குடிவரவு ,குடியகழ்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் எம்.என். ரணசிங்க தெற்காசியாவுக்கான வி.எப்.எஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி வினய் மல்கோட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.
உயர்ஸ்தானிகர்கள் இருவரும் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இங்கு கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய தூதுவர்: இலங்கையில் இருந்து வருடத்திற்கு 25 ஆயிரம் வீசா பெறுவதற்கான விண்ணப்பம் எமது தூதரகத்திற்கு வருகின்றன அவற்றை சிறந்த முறையில் கையாண்டு சிறந்த வேவையை வழங்க இந்த நிலையம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார்.