இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு வந்த ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்று காலையில் வங்கிகளுக்கு சென்று அங்குள்ள சூழ்நிலையை நேரில் பார்த்தேன். அப்போது, வரிசையில் காத்திருக்கும் மக்கள், நிறைய சிரமங்களை எதிர்கொள்வதாக என்னிடம் தெரிவித்தனர்.
அவர்கள் வரிசையில் நிற்கும்போது, குறிப்பட்ட சிலருக்கு பின்வாசல்கள் வழியாக பணம் கொடுக்கப்படுவதாக கூறினர். பணக்காரர்கள் புதிய நோட்டுக்களை எளிதில் பெறுகின்றனர். ஏழைகள், வரிசையில் காத்து நிற்கின்றனர். சிலர் இரண்டு மூன்று நாட்கள் அலைந்தும் பணம் இல்லாமல் சென்றதாக கூறுகின்றனர்.
இந்த ரூபாய் நோட்டு நடவடிக்கைக்குப் பிறகு நாடு தங்கம் போன்று பிரகாசிக்கும் என மோடி கூறியுள்ளார். ஆனால், யாருக்காக? பிரதமருக்கு வேண்டப்பட்ட 15 அல்லது 20 பேரி கருவூலங்கள் நிரப்பப்படும், அவர்களின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். வங்கிகளில் வரிசையில் காத்திருக்கும் ஏழைகள் இழப்பை மட்டுமே சந்திப்பார்கள்.
மூன்று நான்கு பேரிடம் பேசியபிறகு இதுபோன்ற பெரிய பொருளாதார முடிவை பிரதமர் மோடி எடுத்துள்ளார். எந்த திட்டமிடலும் இல்லை. பாதிக்கப்படும் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.மாலைமலர்