நூறானியா மையவாடி சுற்றுமதிளுக்கான அடிக்கல் நடும் வைபவம்




ஆதிப் அஹமட்-

புதிய காத்தான்குடி மக்களின் மிக நீண்டகால தேவையாக இருந்த நூறானிய்யா ஜும்மா பள்ளி வாயலின் மையவாடிக்கான சுற்று மதில் அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளருமான யு.எல்.எம்.என்.முபீனின் முயற்சியில் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவருமான றவூப் ஹக்கீம் அவர்களினால் மேற்படி திட்டத்துக்கு ரூபா ஐம்பது இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதிய காத்தான்குடியின் மிக முக்கியமான பிரதேசமான நூறானியா பகுதியில் உள்ள ஒரேயொரு மையவாடியான இம்மையவாடியில் நூறானிய்யா ஜும்மா பள்ளிவாயல் மஹல்லா,அன்வர் பள்ளிவாயல் மஹல்லா,கர்பலா ஜும்மா பள்ளிவாயல் மஹல்லா,அக்பர் பள்ளிவாயல் மஹல்லா,மற்றும் சக்கீனா பள்ளிவாயல் மஹல்லாக்களில் வசிக்கும் மக்களுக்கான ஒரேயொரு மையவாடியாக நூறானிய்யா மையவாடியே காணப்படுகின்றது.மேற்படி மையவாடிக்கு சுற்றுமதில் இல்லாததன் காரணமாக பல்வேறு பிரச்சினைகளுக்கு பிரதேச வாசிகள் முகம் கொடுத்து வந்தனர்..மேற்படி அடிக்கல் நடும் நிகழ்வு நூறானிய்யா ஜும்மா பள்ளி வாயலின் தலைவர் எம்.பீ.எம்.பாயிஸ் தலைமயில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வில் உரை நிகழ்த்திய பள்ளிவாயல் தலைவர் பாயிஸ்,” மிக நீண்ட நாட்களாக எமது மையவாடிக்கு சுற்றுமதில் அமைக்க முயற்சித்து வந்தோம்.பல அரசியல் பிரமுகர்களை சந்தித்து நிதி உதவி கேட்ட போதும் கிடைக்கவில்லை.ஆனால் எமது பள்ளிவாயலின் முன்னாள் தலைவரும் தற்போதைய எமது பள்ளிவாயலின் ஆலோசகருமான முபீன் சேர் அவர்கள் நாங்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் இச்சுற்றுமதிலுக்கு ரூபா ஐம்பது இலட்சத்தை தலைவர் ஹக்கீம் ஊடாக ஒதுக்கியிருப்பது பாராட்டப்பட வேண்டும் எனவும், மையவாடி சுற்று மதிலுக்கு அரசாங்க நிதியை கொண்டு வருவது மிகவும் கடினமாக இருந்தும் எமது பள்ளிவாயலுக்கு நிதியை கொண்டு வந்தமையையிட்டு நாங்கள் மிகவும் சந்தோஷம் அடைகின்றோம்” எனவும் தெரிவித்தார்.மேற்படி சுற்றுமதிலுக்கான அடிக்கல்லை நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் முபீன்,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் உச்ச பீட உறுப்பினரும் காத்தான்குடிநகர சபையின் முன்னாள் நகர பிதாவுமான மர்சூக் அஹமட் லெப்பை நூறானியா ஜூம்மா பள்ளிவாயலின் கீழுள்ள அனைத்து பள்ளிவாயல்களின் தலைவர்,செயலாளர் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு நட்டு வைத்தனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -