பாறுக் ஷிஹான்-
புத்தளம் கரம்பை கிராமத்தின் தேவைகள் அனைத்தையும் மிக விரைவில் நிறைவேற்றுவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார். பாலர் பாடசாலை ஆசிரியர்களால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட கலை நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மன்னாரிலிருந்து உள்நாட்டு யுத்தம் காரணமாக வெளியேறிய முஸ்லீம் மக்கள் செறிந்து வாழும் கிராமமான புத்தளம் கரம்பை கிராமம் உள்ளது. கடந்த காலங்களில் இடம்பெயர்ந்த மக்கள் வாழும் இப்பகுதியில் உள்ள முக்கிய தேவைகள் நிறைவேற்றப்படவுள்ளன.என்னையும் எனது கட்சியையும் ஆட்சிபீடம் ஏற உதவியவர்கள் இக்கிராமத்தினர்.நன்றி மறப்பது நன்றன்று.
எனவே தான் இக்கிராம மக்களின் தேவைகளை துரித கதியில் செய்ய முயற்சிப்பேன் என அவர் மேலும் கூறினார். இதன் போது இளைஞர் கழக அங்கத்தினர் மற்றும் பள்ளி நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.